'உறவினர் வீட்டுக்கு செல்லும்போது'... ‘திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்’... 'பதறிப்போன கணவன்-மனைவி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென ஆம்னி வேன் தீப்பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன்- சாருலதா தம்பதியினர். இவர்கள் தங்களது மாருதி ஆம்னி வேனில், சின்னமனூரிலிருந்து, திருப்பரங்குன்றத்தில் உள்ள உறவினரைக் காணச் சென்றுகொண்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில், கூத்தியார் குண்டு என்ற இடத்தின் அருகில் ஆம்னி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததால், தம்பதிகள் பதறிப் போயினர்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அவர்கள் கண நேரத்தில், ஆம்னி வேனை உடனடியாக நிறுத்திவிட்டு, கதவை திறந்து வெளியேறினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எந்தவித காயமும் இன்றி, வெங்கடேசனும், சாருலதாவும் உயிர் தப்பினர். பின்னர் தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வந்தனர். ஆனால் அவர்கள் வந்து சேர்வதற்குள், ஆம்னி வேனின் பெரும்பகுதி தீப்பிடித்து எரிந்துப்போனது. இருப்பினும் தீயணைப்புத்துறை வீரர்கள், ஆம்னி வேனில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'பேருந்து கவிழ்ந்து கோர விபத்து'.. 'துடித்துப்போன பள்ளிக் குழந்தைகள்.. ஒரு நொடியில் நேர்ந்த சோகம்!
- ‘அசுர வேகத்தில் வந்த ரயில்முன்’ காரில் மயங்கிக் கிடந்த ஓட்டுநர்.. ‘நொடியில் காவலர் செய்த காரியம்’..
- ‘அசுர வேகத்தில் திரும்பிய பேருந்து’... ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘தூக்கி எறியப்பட்ட பெண்’... 'பதற வைக்கும் வீடியோ'!
- பேருந்தும் லாரியும் ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து.. ‘நொடியில் தீப்பிடித்ததால்’.. வெளியேற முடியாமல் ‘35 பேர் பலி’..
- 'சட்டென வளைவில்'... 'வேகமாக திரும்பிய பேருந்து'... 'நொடியில்’... ‘பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
- 'தோட்டத்துக்கு குளிக்க போன பொண்ணு'...'இரட்டை சகோதரர்கள்' சேர்ந்து செஞ்ச அட்டூழியம்'!
- ‘ஒரே ஒரு செகண்ட் தான்’... ‘மழைக்காக ஒதுங்கியபோது’..‘இடி, மின்னலால்’... ‘பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்’!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘சுற்றுலா சென்ற இடத்தில்’.. ‘வேன் கவிழ்ந்து’.. ‘நொடிப்பொழுதில் நடந்து முடிந்த கோர விபத்து’..