‘பிள்ளைகள் இன்றி வாடிய முதிய தம்பதி’... ‘மனைவி எடுத்த விபரீத முடிவால்’... ‘கணவருக்கு நேர்ந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனைவி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த முதியவர், தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோவை, இருகூரில் வசித்து வந்தவர் 75 வயதான கிருஷ்ணன். இவர் 70 வயதான தனது மனைவி சாரதாவுடன் வசித்து வந்துள்ளார். முதியவர்களான தம்பதி இருவரும் சாலையோரத்தில் கம்பங்கூழ் விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் என்று மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்கள், அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாகக் கடன் தொல்லை மற்றும் பிள்ளைகள் கண்டு கொள்ளாமல் தனிமை உள்ளிட்ட காரணங்களால் முதிய தம்பதியினர் மனமுடைந்து விரக்தியில் இருந்து வந்துள்ளனர்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 25-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய சாரதா வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக, கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற கிருஷ்ணன், கிணற்றில் மிதப்பது தனது மனைவிதான் என்று தெரிந்ததும் யாரும் எதிர்பாராத நேரத்தில் கிருஷ்ணனும், கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கிருஷ்ணன் திடீரென விழுந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்துவந்த காவல்துறையினர், கிணற்றில் இருந்த சாரதாமற்றும் கிருஷ்ணன் இருவரின் உடலை மீட்டுள்ளனர். பாறையில் தலை அடிபட்டு விழுந்ததில், கிருஷ்ணன் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஓடும் பஸ்ஸில் ப்ளான் போட்டு திருடிய கும்பல்’.. மிரள வைத்த நூதன கொள்ளை சம்பவம்..!
- ‘கணவர் வீட்டார் மறுத்ததால்’... ‘பெண் செய்த அதிர்ச்சி காரியம்’... ‘பரிதவிக்கும் குழந்தைகள்’!
- ‘என் மனைவி பிரிஞ்சி போயிட்டாங்க’... ‘அதனால, விபரீத முடிவு எடுத்து’... ‘வீடியோவாக வாட்ஸ்-அப் அனுப்பிய இளைஞர்’!
- ‘திருமணமான 40 நாட்களில்’... ‘கல்லூரி திரும்பிய மருத்துவ மாணவி’... ‘எடுத்த விபரீத முடிவால் பதறிய பெற்றோர்’!
- 6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை..! உச்சக்கட்ட பாதுகாப்பில் தமிழகம்..!
- ‘ரவுடியால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... 'கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்'!
- ‘பேராசிரியர் வகுப்பில் கண்டித்ததால்'... 'மாணவன் எடுத்த விபரீத முடிவு'!
- ‘சுற்றுலா வந்த தம்பதி’.. ‘விளையாட்டாய் செய்த காரியம்’.. ‘வினையில் முடிந்ததால் ஏற்பட்ட பரிதாபம்..’
- ‘பெங்களூரில் காணாமல் போய்’.. ‘கோவாவில் கிடைத்த மகள்..’ வீட்டிற்கு வந்த பின்.. ‘பெற்றோர் செய்த அதிரவைக்கும் காரியம்..’
- 'அப்பா, அம்மாவ ரொம்ப பாசமா'...'பாத்துக்கிட்ட பையன்'... 'எமனாக வந்த தூக்க மாத்திரை '!