‘ஆசிரியையால் 5-ஆம் வகுப்பு மாணவிக்கு’.. ‘பள்ளியில் நடந்த கொடூரம்’.. ‘சென்னை அருகே பரபரப்பு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காஞ்சிபுரம் அருகே 5ஆம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியை பள்ளியில் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் புளியரங்கோட்டை கிராமத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 30க்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர். இங்கு தேவி என்ற ஆசிரியை மட்டுமே பணி புரிந்து வரும் நிலையில் அவரே தலைமை ஆசிரியையாகவும் பொறுப்பு வகிக்கிறார். பள்ளியில் உதவியாளர்கள் யாருமே இல்லாத நிலையில் மாணவிகளே வகுப்பறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியை சுத்தம் செய்தவதற்காக கொடுத்த வகுப்பறை சாவியை லத்திகா என்ற 5ஆம் வகுப்பு மாணவி தொலைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை தேவி அவரை பிரம்பால் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும் மாணவியை அவர் கால்களால் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கல்வித் துறை ஆசிரியை தேவியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

KANCHIPURAM, STUDENT, TEACHER, ATTACK, KEY, PUNUISHMENT, HUMANRIGHTS, NOTICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்