‘கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள் கூட்டம்’.. மூடப்பட்ட மதுரை கலெக்டர் அலுவலக நுழைவு வாசல்.. காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் வாகன பாஸ் வாங்க மக்கள் குவிந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஊரடங்கை மீறி வெளியே தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்களை எச்சரித்தும் அவர்களுக்கு அபராதம் விதித்தும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் மதுரையில் குறிப்பிட்ட வேளைகளில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட வேளைகளில் வாகனங்கள் பயன்படுத்த அனுமதி வழங்கும் இ-பாஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என தகவல் வெளியானது. இதனால் மக்கள் இ-பாஸ் வாங்குவதற்கு அங்கு குவிந்தனர். மேலும் அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் அதிகமாக குவிந்ததால், அவர்களை கட்டுப்படுத்த போலிசார் வரவழைக்கப்பட்டனர். ஆனாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் அடைக்கப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்