'சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான'... 'பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு'... ‘தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு குறித்து வெளியான தகவல்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்து இன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12 பொதுத்தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும், மீதமுள்ள இந்த தேர்வுகள் கண்டிப்பாக நடத்தி முடிக்கப்படும் என்று 10 நாட்களுக்கு முன்னர் சிபிஎஸ்இ கூறியிருந்தது.

இந்த நிலையில், வரும் ஜுலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத்தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, 1-ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும், 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் உள்ள பருவமுறைத்தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும் என்றும், உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளாக அமைச்ச செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்