மின் கட்டண பில் (EB Bill) ஷாக் அடிக்க வைக்கிறதா?.. அதிக கட்டணத்தை சரி செய்யும் வழி 'இது' தான்!.. அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அதிக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக பரவலாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதனை பொதுமக்கள் எப்படி சரிசெய்து கொள்ளலாம் என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு மாதங்களாக குடியிருப்புகளுக்கு சென்று மின் கட்டணம் அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டு, 2019ம் ஆண்டு மின் கட்டண அடிப்படையில் வசூல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மின் அளவீடுகளை எடுக்கின்றனர். இந்நிலையில், மின் கட்டண பில், பன்மடங்கு அதிகரித்துள்ளதாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அதாவது மின் கட்டணம், இரு மடங்கு, மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதிலும் சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகமாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்னகம் சேவை மையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுவரையில் 14 லட்சம் மின் நுகர்வோர்கள், அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட மின்கட்டணத்தை திருத்தி அதன் பின்னர் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கருதும் மின் நுகர்வோர் 9498794987 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தால் மின் வாரிய அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு வந்து ஆய்வு செய்து கட்டண திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் செய்வார்கள் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வச்சுருக்கவரா 'இப்படி' பண்ணினாரு...? 'ஸ்பாட்டுக்கு போய் சோதனை நடத்திய அதிகாரி...' - தெரிய வந்த 'அதிர' வைக்கும் உண்மை...!
- "தமிழகம் முழுவதும் உள்ள மின் அளவீட்டுக் கருவிகளில் 'புதிய' மாற்றம்"!.. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு!
- 'தமிழ்நாட்டின் மின்தடை'!.. தீர்வு எப்போது?.. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
- "இது வருஷக் கணக்கா போராடின பெண்களுக்கு கிடைச்ச வரலாற்று வெற்றி!".. கட்டிப்பிடித்து அழுது.. சாலையில் திரண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்திய பெண்கள்!
- செல்போன், கரண்ட் ரெண்டுமே எனக்கு தேவையில்ல...! எதற்காக இப்படி ஒரு முடிவு...? அதிர வைக்கும் காரணம்...!
- 'பாராளுமன்றத்தில் கடும் அமளி!.. டிவி இணைப்பு துண்டிப்பு'!.. விதிகள் மீறப்பட்டதா?.. என்ன நடந்தது?
- "ஹாஸ்பிட்டல் பில் பார்த்ததும் ஒரு நிமிஷம் என் உடம்பெல்லாம் ஆடிபோயிடுச்சு!".. கொரோனா சிகிக்சை பெற்ற நோயாளியை... தலைசுற்ற வைத்த கட்டணம்!
- 'சீன' நிறுவனங்களுக்கு 'செக் வைக்கும்' மசோதா... அமெரிக்க 'செனட் சபையில்' நிறைவேறியது... 'சீனாவுக்கு' எதிரான 'வேலைகளைத்' தொடங்கியது 'அமெரிக்கா...'
- 'ரூ. 52 ஆயிரத்திற்கு ‘சரக்கு’ பில்...' '48 லிட்டர்...' '128 பாட்டில்...' 'குடிமகனின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை...'
- உங்க 'பையனோட' ஏன் சாப்ட்டீங்க?.. பெண்ணிற்கு 'பில்' அனுப்பிய கல்யாண வீட்டார்!