கொரோனா ஒழிப்பில்... சிறந்த மருத்துவ கட்டமைப்பின் மூலம்... சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் மக்கள் தொகை 8 கோடியாக இருந்த போதிலும், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும், இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக இருந்துவருகிறது. கொரோனா பரிசோதனை விகிதமும், குணமடைவோர் விகிதமும் இந்தியா அளவில் தமிழகம் சிறந்து விளங்குவதிலிருந்து, தமிழக அரசின் சிறந்த நிர்வாகத்திறன் புலப்படுகிறது.
வருமுன் அறிதல்:
* வெளி மாநிலம் (அ) வெளி நாட்டிலிருந்து தமிழகத்திற்குள் வரும் யாவரும், எவ்வித நோய் அறிகுறியும் இல்லாதிருக்கும் நிலையில் மட்டுமே, நுழைவு அனுமதி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அறிகுறி இல்லாமல் இருப்பவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
*சென்னையில் 3-7 நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சி ஊழியர்கள் வீடு தோறும் சென்று மக்கள் உடல்நிலையை பரிசோதிக்கின்றனர்.
தீவிர பரிசோதனை:
* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 11 கோடி மக்கள் தொகை கொண்ட மஹாராஷ்டிரா, 2.7 மில்லியன் பரிசோதனைகளை மட்டுமே செய்திருக்கும் நிலையில், 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகம் 3.2 மில்லியன் பரிசோதனைகளைச் செய்துள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதல்:
* தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தியதன் மூலம், தொற்று பரவும் வேகத்தை தமிழக அரசு வெகுவாகக் குறைத்துள்ளது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்:
* IVRS தொழில்நட்பத்தின் மூலம், பொதுமக்கள் கோவிட் உதவி எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற முடியும். தமிழக அரசின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.
* லாக்டவுன் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க, Tamil Nadu e-Governance Agency (TNeGA) வர்த்தகத்திற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
தி சென்னை மாடல்:
* சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 87.5 ஆக இருக்கிறது. இது தேசிய அளவில் மிகச்சிறந்த சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
* முதலில் 1,000 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் சென்னையில் இருந்தன. தற்போது அவை, 24 ஆக குறைந்துள்ளன.
மேலும்,
* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவிலான RT-PCR மையங்கள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 135 கோவிட் பரிசோதனை மையங்கள் (61-அரசு, 74-தனியார்) இருக்கின்றன.
* e-sanjeevani tele-consultation sessions-இல் தேசிய அளவில் தமிழகம் தான் முதலிடம்.
* கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 81.4 ஆக இருப்பதன் மூலம், தமிழகம் இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது.
* தமிழகத்தில் தான் அதிக அளவிலான அரசு மருத்துவர்கள் கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுவருகின்றனர்.
* தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான படுக்கைகள் - (1,29,122), வெண்டிலேட்டர் - 2,882 அரசு மருத்துவமனைகளில் உள்ளன.
* பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “இத பண்ணலனா, ரஷ்யாவின் கொரோனா மருந்து ஆபத்துதான்!”.. “ஆனா எங்க கிட்ட இருந்து மருந்து வர்றதுக்கு டைம் வந்தாச்சு!” .. ‘அதிரடியாக அறிவித்த நாடு!’
- தமிழகத்தில் ஒரே நாளில் 5,146 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்!.. கலங்கடிக்கும் பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே!
- 'வல்லரசுகளே திணற'... 'எகிறிய பாதிப்பிலிருந்து இந்த நாடு மட்டும் எப்படி மீள்கிறது?'... 'விளக்கமளித்துள்ள நிபுணர்கள்!'...
- 'அட போங்கப்பா... நீங்களும் உங்க கொரோனாவும்!.. இதெல்லாம் பார்த்தா பொழப்பு நடத்த முடியுமா'?.. நிறுவனங்களின் 'அதிரடி' முடிவால்... திகைத்துப் போன ஊழியர்கள்!
- கொரோனா பலி எண்ணிக்கையில்... 'வல்லரசு' நாட்டை பின்னுக்குத்தள்ளி 4-வது இடம்பிடித்த இந்தியா!
- 'பிரதமர் பங்கேற்ற அடிக்கல் நாட்டு விழா'... 'ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா'... மருத்துவமனையில் அனுமதி!
- 'சாப்பிட்டது இந்த இறைச்சியைத் தான்'... 'சீனாவுக்கு வந்த சோதனை'... 'அண்டை நாட்டிலிருந்து பரவும் புதிய நோய்'... பலியான முதல் நபர்!
- பரிசோதனையில் கிடைத்த 'சூப்பர்' ரிசல்ட்... புதிய மைல்கல்லை எட்டிய 'கோவாக்சின்'... பொது பயன்பாட்டுக்கு எப்போது கிடைக்கும்?
- விநாயகர் சதுர்த்திக்கு 'முட்டுக்கட்டை' போட்ட கொரோனா!.. தமிழக அரசு 'அதிரடி' அறிவிப்பு!.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
- 'எங்ககிட்டயே இன்னும் அப்ரூவல் வாங்கல...' மொதல்ல நாங்க டெஸ்ட் பண்ணனும்... உலக சுகாதார நிறுவனம் அதிரடி...!