மிரட்டும் மாண்டஸ் புயல் காரணமாக இடிந்து விழும் வீடுகள்.. !! வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னைக்கு அருகே மையம்கொண்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக புதுச்சேரி பிள்ளைச்சாவடி பகுதியில் உள்ள வீடுகள் சேதமடைந்திருக்கின்றன.

Advertising
>
Advertising

Also Read | "வலிமையான பெண்ணுக்கு".. ஆந்திர CM ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவியின் பிறந்தநாள்.. நடிகை ரோஜாவின் எமோஷனல் போஸ்ட்..   

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும் இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரங்களில் கரையை கடக்க கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கன முதல் அதிக கன மழை பெய்யலாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இதனிடையே மாண்டஸ், தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், புதுச்சேரி அருகே உள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் மாண்டஸ் புயல் காரணமாக 15 க்கும் மேற்பட்ட வீடுகள் மோசமாக சேதமடைந்திருக்கின்றன. கடற்கரை அருகே அமைந்துள்ள வீடு ஒன்று, மண் அரிக்கப்பட்டதால் அதன் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இதனிடையே மாண்டஸ் புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்திருக்கின்றனர். மேலும், அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கிவைத்துக்கொள்ளும்படி நேற்று அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "ஹலோ MLA".. தேர்தலில் வெற்றிபெற்ற மனைவி.. ரவீந்திர ஜடேஜா போட்ட நெகிழ்ச்சியான போஸ்ட்..!

HOUSES, TRASH, MANDOUS CYCLONE, PUDUCHERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்