'வீட்ல ஹார்ட் பேசன்ட் இருக்காங்க'... 'கொரோனா சிகிச்சை முடிந்து வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி'... சென்னையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் பலரும் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். ஒரு பக்கம் பொருளாதார பிரச்சனைகள் சூழ்ந்திருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் என்பது சொல்லி மாளாத வகையில் உள்ளது.
சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் குமார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்த சூழ்நிலையில் நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டுக் கதவை முழுவதும் மூடும்படி இரும்பு தகரத்தைக் கொண்டு அடைத்துள்ளனர். இதைச் சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அவரது வீட்டில் இருதய நோயாளிகள் உட்பட 4 பேர் வசிக்கும் நிலையில், ஜன்னல் வழியாகக் கூட பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைப் பெற முடியாத சூழல் உள்ளது. கொரோனா சிகிச்சை முடிந்து வந்த பிறகு ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதவாறு முடக்கி வைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள நகராட்சி அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை முடிந்து வந்தாலும், இன்னும் 14 நாட்கள் ஆகவில்லை எனவும், வீட்டில் உள்ளவர்களுக்கு உதவத் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். மேலும் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரங்களைக் கொண்டு அடைப்பது வழக்கமான நிகழ்வு தான் எனவும் கூறியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- Oxford பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து தமிழகம் வருகிறது!.. 'இது' தான் ப்ளான்!.. தயார் நிலையில் மருத்துவர்கள்!
- 'இப்படியே போச்சுனா எத்தனை பேர் 'ரோட்டு'க்கு வருவாங்க தெரியுமா!? கொடிகட்டி பறந்தவங்களுக்கே இந்த நிலையா'?.. மோசமான நெருக்கடியில் நிறுவனங்கள்!.. 'பகீர்' தகவல்!
- “ஒழிஞ்சுதுனு நம்பி பள்ளிகள திறந்தோம்!”.. “அம்புட்டுதேன்.. இப்ப வெச்சு செய்யுது”.. - 'புலி வால புடிச்ச கதையா' திண்டாடி வரும் நாடு!
- 'சென்னையில் நாளை (26-08-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'...
- VIDEO: 90's கிட்ஸ்-க்கு மட்டும் தான் இதெல்லாம் அமையுது!.. எப்படி அசத்தி இருக்காங்கனு பாருங்க!.. கல்லூரி நிர்வாகம் சர்ப்ரைஸ்!
- 'உலகிலேயே முதல்முதலாக இப்படி ஆகியிருக்கு'... ' 4 மாதங்களுக்கு பின் அதிர்ச்சி கொடுத்த கொரோனா'... 'ஆய்வாளர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!'...
- ‘தடையை மீறி மது.. பார்ட்டி..நடனம்!’.. கொத்தாக பிடிக்க போன போலீஸ்.. 12 பெண்கள் உட்பட அடுத்தடுத்து உயிரிழந்த 13 பேர் !
- 'தடுப்பூசி விஷயத்தில்'... 'துணிச்சலாக புது ரூட்டை கையிலெடுத்த சீனா'... 'பாதிப்பு குறைய இதுதான் காரணமா?'... 'சந்தேகத்தை கிளப்பும் நாடுகள்'...
- "150 நாட்களுக்கும் மேல் திறக்கப்படாத தியேட்டர்கள்".. ஆனாலும் நடந்த ஆச்சர்யம்..! கெத்து காட்டிய ‘மல்டிப்ளக்ஸ்’ தியேட்டர்கள்!