'ஊரே அல்லோலப்பட்டு கெடக்கு' ... 'வாடகை ஒண்ணும் வேணாங்க' ... கோவை வீட்டு உரிமையாளரின் நெகிழ்ச்சி முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு உத்தரவால் கூலி தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகி வரும் நிலையில், கோவையிலுள்ள வீடு உரிமையாளர் இந்த மாதம் வாடகை தர வேண்டாமென தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 - ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினசரி கூலி தொழிலாளர்கள் கடும் அவதிக்குளாகியுள்ளனர். இவர்களுக்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் குறிச்சி பகுதியை சேர்ந்த காதர் என்பவர் தனக்கு சொந்தமான 15 வீடுகளையும் கூலி தொழிலாளிகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். தற்போதுள்ள ஊரடங்கு காரணமாக வாடகைக்குள்ள தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் இந்த மாதம் வாடகை வேண்டாம் என காதர் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காதர் கூறுகையில், 'ஊரடங்கு உத்தரவால் எனது வீட்டில் வாடகைக்கு இருக்கும் அனைத்து கூலி தொழிலாளர்களின் குடும்பமும் சிரமத்தில் உள்ளது. இதனால் இந்த மாதத்திற்கான வாடகை வேண்டாம் என கூறி என்னால் முடிந்த சிறு உதவியை அவர்களுக்கு செய்துள்ளேன்' என்றார் பெருமிதமாக. மேலும் வாடகைக்கு இருக்கும் தொழிலாளி ஒருவர், 'இந்த மாதம் வாடகை தேவையில்லை என உரிமையாளர் அறிவித்துள்ளதால் அந்த காசினை அடுத்த மாதம் செலவிற்காக பயன்படுத்திக் கொள்வோம்' என்றார்.

ஊரடங்கு உத்தரவால் இது போன்று அவதிக்குளாகி வரும் மக்களுக்கு பல நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

CORONA AWARENESS, LOCKDOWN, KOVAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்