‘5 ரூபாய் இட்லிக்கு 20 வகை சட்னி’.. கேட்டாலே அசர வைக்கும் லிஸ்ட்.. ஹோட்டல் ‘பெயர்’ கூட அதுக்கு ஏத்த மாதிரியே இருக்கே..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் இட்லிக்கு 20 வகையான சட்னி கொடுத்து வியாபாரி ஒருவர் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்.

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பர்மா காலனி ஜெய்நகர் சாலையில் வீட்டின் மாடியில் ‘நினைவூட்டும் இட்லி கடை’ என்ற ஹோட்டல் அமைந்துள்ளது . இந்த பெயருக்கு ஏற்றவாறு இங்கு ஒரு முறை சாப்பிட்டால் அது நினைவில் இருந்து நீங்காது என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி இந்த ஹோட்டலில் என்ன ஸ்பெஷல் என்றால், இங்கு விற்கப்படும் ஒரு இட்லியின் விலை ரூ.5, ஆனால் அதற்கு 20 வகையான சட்னிகள் வழங்கப்படுகிறது.
கேட்டாலே வியக்க வைக்கும் அளவுக்கு தக்காளி, கத்தரிக்காய், காரட், கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய், புதினா, மல்லி, சர்க்கரை, நாட்டு சர்க்கரை, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பொருட்களில் சட்னி மற்றும் இட்லி பொடி, நல்லெண்ணெய் என வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. வீட்டில் ஒரு இட்லி கூட சாப்பிடாத குழந்தை இங்கு வந்தால் குறைந்த பட்சம் 4 இட்லி சாப்பிடுவதாக இந்த கடையின் உரிமையாளர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்த கடைக்கு விடுமுறையே விடப்பட்டதில்லை என கூறப்படுகிறது. மேலும் நஷ்டம் என்பதே இல்லை என்பதோடு சேவை அடிப்படையில் கடையை தொடர்ந்து நடத்தி வருவதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பார்சல் வழங்கினால் கெட்டுப்போய்விடும் என்பதால் இந்த கடையில் பார்சல் தவிர்க்கப்படுகிறது. தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை மட்டுமே இந்த இட்லி கடை செயல்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘8 விநாடிகள்’... ‘கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறிய நபர்’... ‘இத்தனை லட்சம் அபராதமா?’...!!!
- 'சாம்பார்ல கிடந்த எலிக்குஞ்சு...' 'அந்த பார்சலோட ஹோட்டல்ல போய் கேட்டப்போ...' - தம்பிக்காக ஆப்பம் வாங்குனப்போ அக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
- என்ன பண்றேன்னு எனக்கே தெரியல சார்...! கவர்மெண்ட் பஸ்ஸ ஆட்டைய போட நெனச்ச நபர்... - 'பைக்ல விரட்டி போய் வண்டி மூவிங்லையே 'த்ரில்' சேஸ்...!
- VIDEO: 'பூஜை செய்துகொண்டிருந்த பூசாரி'.. கூட்டத்தை விலக்கிவிட்டு கற்பகிரகத்துக்குள் சென்று கவுன்சிலரின் கணவர் செய்த ‘பரபரப்பு’ சம்பவம்! வீடியோ!
- “கர்ப்பத்தை கலைக்கச் சொன்ன கணவர்!”.. சந்தேகப்பட்டு 'செக்' பண்ணிய மனைவிக்கு காத்திருந்த 'ஷாக்'! திருச்சியில் பரபரப்பு!
- வெளிய ஆயுர்வேத 'ஸ்பா' போர்டு... ஆனா 'உள்ள' நடக்குறதே வேற..." வெளியான அதிர்ச்சி 'தகவல்'... போலீசார் எடுத்த 'அதிரடி'!!!
- 8 மாதங்கள் வரை சாப்பிட முடியுமாம்!.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி?.. தென்னக ரயில்வே 'அதிரடி'!.. கொந்தளித்த ரயில் பயணிகள்!
- இதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா..? ‘காவி சாயம், காலணி மாலை’.. கொதித்த தலைவர்கள்..!
- 'என்ன மன்னிச்சிடு'... 'திடீரென குண்டை தூக்கி போட்ட இளைஞர்'...'காதலிச்ச நேரம் இனிக்குது, இப்போ கசக்குதா'... காதலி வச்ச செக்!
- ‘கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா காப்பாத்திருக்கலாமே’.. நடுரோட்டில் ‘மரங்களை’ போட்டு போராட்டம்.. பரபரப்பான நேஷனல் ஹைவே..!