“கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா?”.. ‘கண்டறிய உதவிய மருத்துவமனை உரிமையாளர் கைது!’ .. ‘நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்மத்திய அரசின் பாலினத்தை முடிவு செய்தல் தடை சட்டத்தின்படி கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பதை சோதனை செய்து தெரிந்து கொள்வது ஸ்கேன் மூலம் கண்டறிய மருத்துவர்கள் உதவுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் தடைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே கரு என்ற வார்த்தை சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்டது. இந்திய மக்கள் ஆண் குழந்தைகளை பெரிதும் விரும்பும் சமுதாயமாக இருப்பதால் பெண் சிசுக்களை அழிப்பது தொடர்ந்தது. இந்த செயலை தடுக்கும் விதமாக இதற்கென ஒரு தனி சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி பெண் சிசுக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை மீறி செயல்படும் மருத்துவருக்கும், பெண்ணின் குடும்பத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆனாலும் ஆங்காங்கே இச்சட்டத்தை மீறி கருக்கலைப்புகள் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 2010 வரை ஒரு கோடி கருக்கலைப்புகள் நடந்ததாக கூறப்படுகிறது. அரசு பெண் குழந்தைகளை காக்க சட்டம் வகுத்து போராடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் கடலூர் மாவட்டம் நெய்வேலி பெரிய குறிச்சியில் மகாலட்சுமி என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு மத்திய அரசின் சட்டத்தை மீறி கருவில் இருக்கும் குழந்தையை கண்டறிந்து சொல்வதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
இந்நிலையில் ஸ்கேன் மூலமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பாலினம் கண்டறிந்து சொல்வதாக கடந்த 2014-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து அந்த மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
கருவை கண்டறிந்து சொன்னது உண்மை என விசாரணையில் தெரியவந்தது. இதனால் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நெய்வேலி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மருத்துவ ராமச்சந்திரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அமெரிக்க மாப்பிளைன்னு ஒன்னுக்கு ரெண்டா செஞ்சோம்'... 'கல்யாணம் ஆன முதல் நாளே கேட்ட கேள்வி'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'ஓரமா போய் விளையாடுங்கப்பா!'.. போலி தடியடி நடத்திய போலீஸ்!.. சாதூரியத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட ‘இரண்டு ஊர் சண்டை’!
- "என் குழந்தைய என்கிட்ட கொடுக்கல"!!.. கதறும் தாய்!.. "அவங்களுக்கு குழந்தையே பிறக்கல!".. கொந்தளிக்கும் மருத்துவர்கள்!.. ஸ்தம்பித்துப் போன கிராமம்!!
- 'கர்நாடகாவில் இன்று முதல் அமலுக்கு வரும் தடைச் சட்டம்!' - மீறுவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
- #VIDEO: 'ஆப்பரேஷன் தியேட்டருக்குள்ள...' 'பெட்ல ஹாயா உட்கார்ந்திருந்த நாய்...' 'உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...' - வைரலாகும் வீடியோ...!
- 'ஹலோ... யாரும்மா நீங்க?.. இது போலீஸ் ஸ்டேஷன்'!.. 'என்னைய பாத்தா யாருனு கேட்ட'!?.. மப்டி உடையில் வந்த பெண் துணை கமிஷனர்!.. பாவம் அந்த பெண் போலீஸ்!
- "ஸ்கேனை உத்து பாத்தப்போ இவர் முகம் தான் தெரியுது!".. கர்ப்பிணி பெண் ‘குறிப்பிட்ட’ அந்த ‘அகில உலக’ பிரபலம் யார் தெரியுமா?
- 'சென்னையில் நடந்து செல்லும் பெண்களை குறிவைக்கும் ஆசாமிகள்'... 'யார் அந்த டூவீலர் ஆசாமிகள்'... தீவிர விசாரணையில் காவல்துறை!
- 'தூங்குறப்போ டிஸ்டர்ப் பண்ணாதீங்க சார்...' 'போலீசாரை டென்ஷன் ஆக்கிய திருடன்...' 'யார்னு உடனே கண்டுபிடிச்சாகணும்...' - துப்பு துலக்க உதவிய 'அந்த' சிசிடிவி வீடியோ...!
- ‘ஆபாச வீடியோ எடுத்ததோட நிறுத்தல’!.. காசியால் இளம்பெண்கள் அனுபவித்த கொடுமை.. சிபிசிஐடி தாக்கல் செய்த 400 பக்க குற்றப்பத்திரிக்கை..!