'திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் பின்னடைவு...' மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக அரசின் மாநில சட்டமன்ற உறுப்பினரான திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

'திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் பின்னடைவு...' மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு...!
Advertising
Advertising

61 வயதான திமுக எம்.எல்ஏ ஜெ.அன்பழகன் கடந்த 2ஆம் தேதி கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையான dr.ரீலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

திரு. அன்பழகன் 03.06.2020 அன்று மோசமான உடல்நிலையோடு இருப்பதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும், அதை தொடர்ந்து அவரின் உடல்நிலை முன்னேறி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அவருக்கு உயர் இரத்தழுத்தம் மற்றும் கல்லிரல் கோளாறு காரணமாகவும் தற்போது அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர் ரீலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டரின் தலைமை அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்