'படிப்பு ஒன்னுதான் அழியாதது.. பொறுப்பு ஜாஸ்தி ஆயிருக்கு'.. 'பட்டமளிப்பு விழாவில்' பேசிய முதல்வர் 'டாக்டர் எடப்பாடி பழனிசாமி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆராய்ச்சிப் படிப்புக்காக குறிப்பிட்ட துறையில் ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் டாக்டர் பட்டம் வழங்கப்படுவது ஒரு வகை. இன்னொரு வகை டாக்டர் பட்டம் என்பது சினிமா, அரசியல், இலக்கியம் முதலிய அகாடமிக் கல்வி சாராத துறைகளில் இயங்குபவர்களைக் கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படுவது. 

அவ்வகையில் எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில், நடத்தப்பட்ட 28வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘இந்த நிதியாண்டில் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 12 அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளை அரசு துவக்கியுள்ளது.அண்ணாவின் சொற்களை பின்பற்றுங்கள். கல்விதான் ஒருவருக்கு அழிவில்லாதது கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் அதிகரித்துள்ளன’ என்று பேசியுள்ளார். 

இதற்கு முன்னதாக முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட முதல்வர்களுக்கும், துணை முதல்வராக இருந்த போது ஸ்டாலினுக்கும், அரசியல் கட்சி தலைவர் விஜயகாந்துக்கும், நடிகர்கள் விஜய், விஜயகுமார் ஆகியோருக்கும் ஏற்கனவே டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தற்போது அக்டோபர் 20, ஞாயிற்றுகிழமை நிகழ்ந்த இந்த விழாவில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் நடனப்புகழ் நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கும் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

EDAPPADIKPALANISWAMI, HONORY, DOCTORATE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்