‘தொடர்ந்து பெய்து வரும் கனமழை’... ‘இன்று எங்கெல்லாம்’... ‘பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’... தேர்வுகள் ஒத்திவைப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, 9 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (02.12.2019) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், நாகை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் பல்கலைக்கழகம் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங் மேன் பணிக்கான நேர்முகத் தேர்வு, வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்வுகள் மழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், மாற்று தேதிகள் பின்னர் அறிவிகப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதேபோல், புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு (02.12.2019) விடுமுறை என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 2 நாளைக்கு.. 'இந்த' மாவட்டங்கள்ல.. விடிய,விடிய 'மழை' வெளுத்து வாங்கும்!
- ‘தொடர் கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..
- 'சனிக்கிழமை முதல் கனமழை'... ‘மீனவர்களுக்கு எச்சரிக்கை’... 'வானிலை மையம் தகவல்'!
- 'ஒரு நாள் மழைக்கே இப்படியா'?...'ஏரி'யாக மாறிய முக்கிய சாலை'...வைரலாகும் வீடியோ!
- ‘தொடர் மழை எதிரொலி’... ‘தேர்வுகளை ஒத்திவைத்த’... ‘2 யுனிவர்சிட்டிகள்’... ‘விவரம் உள்ளே!
- ‘கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..
- இந்த மாவட்டங்களில் எல்லாம் ‘கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’... 'வானிலை மையம் தகவல்'!
- 'அடுத்த 2 நாட்கள்'... '9 மாவட்டங்களில் மழை'... 'வானிலை மையம் தகவல்'!