இந்தி மொழி கட்டாயம் இல்லை..! புதிய கல்விக் கொள்கையில் திருத்தம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கட்டாய இந்திய மொழிக்கு எதிராக பலத்த எதிர்ப்புகள் தொடர்ந்து வந்த நிலையில் மத்திர அரசு திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை வெளியிட்டது. இதில் மும்மொழிக்கொள்கை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தவிர மூன்றாவது ஒரு மொழி பயிற்றுவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் இந்தி பேசாத மாநிங்களில் மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து #TNAgainstHindilmposition, #StopHindilmposition போன்ற ஹேஸ்டேக்குகளை பலரும் டுவிட்டரில் பதிவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இது இந்தியா அளிவில் டிரெண்டிடாகி கவணத்தை ஈர்த்தது.

இந்நிலையில் திருத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி படிக்க கட்டாயம் இல்லை. மாணவர்கள் விரும்பினால் மூன்றாவதாக ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து படிக்கலாம் என திருத்தப்பட்ட வரைவுக்கொள்கையில் இடம்பெற்றுள்ளது.

TNAGAINSTHINDIIMPOSITION, HINDIIMPOSITIONS

மற்ற செய்திகள்