"நிறுவனத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க இத பண்ணியாக வேண்டியது இருக்கு!".. LayOff அறிவிச்ச அடுத்த நாள் பிரபல நிறுவனத்தின் CMO போட்ட பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஹில்டன் சி.எம்.ஓ கெலின் ஸ்மித் கென்னி இன்று அந்நிறுவனத்தில் இருந்து விலகுவதாகக் கூறினார்.

2018 முதல் ஹில்டனுடன் இருக்கும் ஸ்மித் கென்னி,  தனது லிங்கெடினில் இட்ட ஒரு பதிவில், “ஹில்டனின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, அதன் பணியாளர்களை எப்போதும் இல்லாத அளவில் குறைக்க வேண்டும், என்பதால் நானும் இங்கு பணியாற்றும் சந்தர்ப்பத்தை அளித்த நல்ல நண்பர்களிடம் இருந்து விடைபெற்றாக வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நிறுவனத்தினை பெரிதான கட்டமைப்புடன் உருவாக்கவும் மற்றும் மறுவடிவமைப்பு செய்யவும் நாங்கள் அயராது உழைத்தோம், ஆனாலும் தற்போதைய முடிவுகள் அசாதாரணமானவையாக இருக்கிறது" என்று ஸ்மித் கென்னி குறிப்பிட்டுள்ளார். "இந்த வாரத்தில் நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் ஒரு அத்தியாத்தை முடித்து அதேசமயம், இன்னொரு பக்கத்தைத் திருப்பி புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பையும் வழங்குகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ஸ்மித் கென்னியின் இந்த முடிவு, கடந்த செவ்வாயன்று கிட்டத்தட்ட 2,100 ஊழியர்களை மெக்லீனில் உள்ள கார்ப்பரேட் தலைமையகம் வெளியேற்றியதால் எடுக்கப்பட்டது என்பதும்,  தனது பதவிக் காலத்தில், ஸ்மித் கென்னி ஹில்டனின் விசுவாசியாகவும், மார்க்கெட்டிங் மதிப்பினை இரட்டிப்பாகி, கிட்டத்தட்ட 100 மில்லியன் உறுப்பினர்களுடன் மதிப்பை உயர்த்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஊழியர்களைக் குறைப்பதாக வெளியான ஹில்டனின் அறிக்கையில், ஹில்டன் தலைமை நிர்வாக அதிகாரியான கிறிஸ்டோபர் நாசெட்டா, “ஹில்டனின் 101 ஆண்டு வரலாற்றில் ஒருபோதும் எங்கள் தொழில், இப்படி உலகளாவிய நெருக்கடியை எதிர்கொண்டதில்லை, ஆனால் இந்த முடிவு எங்கள் பயணத்தை ஒரு கண்முன்னே நம்ப முடியாத  ஆனால் வேறு வழியில்லாத நிலைக்கு கொண்டு வருகிறது. எப்போதுமே மக்களுக்கு சேவை செய்யும் நபர்களின் வணிகமாக எங்கள் நிறுவனம் இருக்கும், அதனால்தான் எங்கள் வணிகத்தைப் பாதுகாக்க, எங்கள் குழு உறுப்பினர்களை நேரடியாக பாதிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்