இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை.. எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இலங்கை தொடா் வெடிகுண்டு தாக்குதலைத் தொடா்ந்து, சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தீவிர சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இலங்கையின் கொழும்பு நகரில் ஈஸ்டர் தினத்தன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என பல்வேறு இடங்களில் திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதனையடுத்து கொழும்புவில் பல்வேறு முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டன.

இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இலங்கையில் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டுகள் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில், அந்நாட்டு ராணுவம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையின் அண்டை நாடான இந்தியாவிலும் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை தொடா் வெடிகுண்டு தாக்குதலைத் தொடா்ந்து, இந்தியாவின் பல பகுதிகளில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத்தளங்கள், சுற்றுலாத் தளங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னை எழும்பூா் ரயில் நிலையம்,  எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

ஆபரேஷன் ஸ்டிரோமிங் என்ற இந்த சோதனையில் 200-க்கும் மேற்பட்ட தமிழக காவல்துறையினா், ரயில்வே காவல் துறையினா் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். ரயில் நிலையங்கள் மட்டுமின்றி விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

CHENNAI, RAILWAYSTATIONS, ALERT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்