'டூவீலரில் வந்து, இளைஞரிடம் கைவரிசையைக் காட்டிய வாலிபர்கள்'.. பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் செல்போனைப் பறித்த வழிப்பறிக் கொள்ளையர்களிடம் போராடிய இளைஞரது செயல்கள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இன்றைய நவீன காலத்தில் திருட்டு என்பது டிஜிட்டல் வடிவில், டிஜிட்டல் வறுமையால் பெரும்பாலும் நிகழ்கின்றன. ஆன்லைன் மூலமாக செய்யப்படும் திருட்டுக்கள் தொடங்கி, அதற்கு அடித்தளமாக இருக்கும் ஒரு ஸ்மார்ட் போன் வரையிலும் இதில் அடங்குகின்றன.

ஒரு செல்போனை விடவும், அதில் அடங்கியுள்ள டிஜிட்டல் தரவுகள் பயனாளர்களுக்கு முக்கியமானவைகளாக இருக்கின்றன. அவ்வகையில் ஆழ்வார்ப்பேட்டை அருகே உள்ள கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த சரவணன், தன் வேலையை முடித்துவிட்டு இரவில் டிடிகே சாலை வழியே நடந்து சென்றபோது, அங்கு பைக்கில் வந்த கொள்ளையர்கள், சரவணனுடைய செல்போனைப் பிடித்து இழுத்து பறிக்க முயன்றபோது சரவணனையும் சேர்த்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் சரவணன் அவர்களை மீண்டும் பிடித்து இழுத்தபோது, அவர்களும் சாலையில் விழுந்தனர். இதன்பின்னர், அவர்களை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்ததோடும், அவர்களின் செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவை எல்லாமே திருடப்படவை என தகவல்கள் கிடைத்துள்ளன.

THIEF, THEFT, CCTV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்