“அம்மு, தங்கம்.. பட்டு ஏம்மா இப்படி பண்ற? .. தம் இழுத்துட்டு கதவ தட்டினேன்.. பாவி!!” - ஹேம்நாத் ஜாமீனுக்கு எதிராக 10 வருட நண்பர் மனு!.. கூடவே வெளியிட்ட பரபரப்பு ஆடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த மாதம் சின்னத்திரை நடிகை சித்ரா நசரத் பேட்டை நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனையிலும் இந்த தகவல் உறுதியானது.

இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது நசரத் பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட நிலையில்,  ஹேம்நாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு  மனுத் தாக்கல் செய்தார்.

ALSO READ: ‘பன்னீர் பட்டர் மசாலா வைக்கச் சொல்லி கேட்ட பக்கத்து வீட்டு பெண்!’.. 'சமையல் மாஸ்டரான' கணவர் மீது சந்தேகமா? - பதிலுக்கு கணவர் செய்த செயல்!.. உறவுக்கார பெண்ணால் உண்டான புதுக்குழப்பம்!

இந்த நிலையில் தான், ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ஹேம்நாத்தின் 10 ஆண்டு கால நெருக்கமான நண்பரும், காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவருமான சையது ரோஹித் என்பவர் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பல பெண்களுடன் ஹேம்நாத் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதை வைத்து அந்த பெண்களிடம் இருந்து பணம் பறித்து வந்த ஹேம்நாத்தை, தான் முன்பே எச்சரித்தும், ஆனால் ஹேம்நாத் கேட்காததால், அவரை விட்டு, தான் விலகியதாகவும் சையது குறிப்பிட்டுள்ளார். மேலும்,  அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் பெரிய தொழிலதிபர் போல் தன்னைக் காட்டிக் கொண்டு அவர்களுடன் நெருக்கமான நட்பை உருவாக்கிக் கொண்ட ஹேம்நாத், அதே பாணியில் தான் சித்ராவிடமும் அப்படி ஒரு நெருக்கத்தை உருவாக்கிக் கொண்டார் என்றும் சையது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சித்ராவை, சக நடிகருடன் நடனம் ஆடியது தொடர்பாகவும், அவரது நடத்தை மீது சந்தேகப்பட்டும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஹேம்நாத் டார்ச்சர் செய்ததாக சையது தெரிவித்துள்ளார். அத்துடன் ஹேம்நாத் தன்னுடன் பேசியதாகவும் ஒரு ஆடியோ க்ளிப்பை அந்த மனுவுடன் சையது இணைத்து கொடுத்துள்ளார்.

அந்த ஆடியோவில் சையதுவிடம் பேசும் ஹேம்நாத் குரல், சித்ராவுடன் தான் பேசியதை பகிர்ந்ததாக தெரிகிறது. அதில், “எங்கிட்ட சித்ரா சரியாவே பேசல. இவளை தனியாக விட்டது தப்பா போச்சு என தோணுச்சு. செல்லக்குட்டி இன்னைக்கு அவனுடன்  டான்ஸ் ஆடியதாக சித்து கூற, எனக்கு கண்கலங்கிடுச்சு. ஏன் பட்டு இப்படி பண்ற என சொல்லிவிட்டு நான் தம் அடிக்க வெளியே செல்லப்போய் அவளை அழைத்தேன்.

அவ ஹோட்டல் அறைக் கதவை டக்கென சாத்திவிட்டு சென்று பாத்ரூம் உள்ளே சென்று லாக் பண்ணிக்கொண்டு அழுகிறாள். நான் இரண்டு இழுப்புகள் தம்மை இழுத்து தூக்கிப் போட்டுவிட்டு, பட்டு, அம்மு, டேய் தங்கம், சித்து கதவைத் திற என கெஞ்சினேன். ஹோட்டல் உதவியாளரின் உதவியுடன் மாற்று சாவியை வைத்து கதவைத் திறந்து பார்த்தால், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாடா பாவி” என்று பகிர்ந்துள்ளார். எனினும் இது ஹேம்நாத் பேசியது தானா என்று விசாரிக்கப்படும் என தெரிகிறது.

ALSO READ: “நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு.. வர்றீங்களா?”.. ஃப்ரண்டுக்கு ‘ஃபேஸ்புக்கில் ஆபாச மெசேஜ்!’.. சபலிஸ்ட் வாலிபருக்கு ‘பாடம்’ புகட்டிய ‘சிங்கப்பெண்’!

இதனிடையே நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்த ஹேம்நாத்தின் ஜாமின் மனு வந்தது.  இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.  இதனால் இவ்வழக்கு விசாரணை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிக்க முடியாதது.  தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்