‘12.57 லட்ச ரூபாய்க்கு நகை’.. ‘மண்டபத்துக்கு அட்வான்ஸ்!’.. ‘சித்ரா இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் நடந்தது என்ன?’.. - வெளியான ‘வைரல்’ சிசிடிவி காட்சிகள்!.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் மறைந்ததை அடுத்து அவருடைய மரணம் தொடர்பாக பலரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒருபுறம் ஆர்டிஓ இந்த விசாரணையை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இன்னொரு புறம் நசரத்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் ஹேமந்த்தை விசாரித்து வந்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்ததாக குறிப்பிட்டு சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஹேமந்த்தை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி, பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.  அவருடைய தந்தை ரவிச்சந்திரன் அன்மையில் சிறைக்கு சென்று தன் மகன் ஹேமந்த்தை சந்தித்து வந்த நிலையில் அவர் சில சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

வரும் பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேமந்த் அண்மையில் கூறியிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில்தான் சித்ராவின் நடிப்புத்துறையில் அவர் யாருடன் நெருக்கமாக இருக்கிறார் என  சந்தேகப்பட்ட ஹேமந்த் சித்ராவை சந்தேக வார்த்தைகளால் பேசி தொந்தரவு செய்ததாகவும் மற்றும் சித்ராவுக்கு இருந்த கடன் நெருக்கடிகள், ஹேமந்த்தை வருங்கால கணவராக தேர்வு செய்தது பற்றி தோழிகள் மற்றும் சித்ராவின் தாயார் தெரிவித்த ஆலோசனைகள் உள்ளிட்டவை சித்ராவின் மனக் குழப்பங்களுக்கு காரணங்களாக முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில்தான் சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஹேமந்த் அதிரடியாக நசரத்பேட்டை காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இன்னொருபுறம் ஹேமந்த்தின் பெற்றோர் மற்றும் சித்ராவின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் ஆர்டிஓ காவல் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வந்தனர். அதன் பிறகு யாரை காப்பாற்றுவதற்காக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார் என்று ஹேமந்த்தின் தந்தை ஆவேசமாக ஊடகங்களிடையே பேசினார். 

அத்துடன் சித்ரா பல அரசியல்வாதிகளுடன் பேசி வந்ததாகவும் அவருடைய திருமணத்தை தடுத்து நிறுத்த பலர் முயற்சித்து வந்ததாகவும் சித்ராவிற்கு அவர்கள் மிரட்டல் விடுத்ததாகவும் சித்ராவுக்கு மது பழக்கம் இருந்ததாகவும் குறிப்பிட்டு முறையான விசாரணையை முன்னெடுத்து தன் மகனை விடுவிக்குமாறு ஹேமந்த்தின் தந்தை காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். இந்த நிலையில் ஹேமந்த்தின் தந்தை ஒரு முக்கியமான சிசிடிவி ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த சிசிடிவி காட்சிகளில், உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சித்ரா தன் குடும்பத்தினர் மற்றும் ஹேமந்த்தின் குடும்பத்தினர் மற்றும் ஹேமந்த் ஆகியோருடன் சென்று திருமண மண்டபத்தை புக் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், இரண்டு குடும்பத்தினரும் சித்ராவின் மரணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமண மண்டபத்தை புக் செய்யும்போது மண்டபத்தின் வெளியே நின்று சகஜமாக நின்று பேசிக் கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

சென்னை அம்பத்தூரில் இருக்கும் இந்த திருமண மண்டபத்தை இருதரப்பு குடும்பத்தினரும் சுற்றி பார்த்து விட்டு அந்த திருமண மண்டபத்தை பிடித்திருக்கிறது என புக் செய்ததற்கான ரசீதையும் ஹேமந்த்தின் தந்தை ரவிச்சந்திரன் தற்போது வெளியிட்டிருக்கிறார். அந்த ரசீதில் படி பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி ஹேமந்த் மற்றும் சித்ராவுக்கு நடக்கவிருந்த திருமணத்துக்கான மண்டப டோக்கன் அட்வான்ஸ் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

ALSO READ: 'மது பழக்கம் இருந்துச்சு'.. 'சில நம்பர்ல இருந்து போன் வந்தா மட்டும் சித்ரா பதட்டமாகி..' - ஹேமந்த்தின் தந்தை அளித்த பரபரப்பு புகார்!

இதேபோல், கோடம்பாக்கம் பதிவுத் திருமண அலுவலகத்தில் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களும் ஹேமந்த்தின் தந்தையால் வெளியிடப்பட்டுள்ளது.   மேலும் இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக சென்று நகைக்கடை ஒன்றில் 12 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு நகைகளை வாங்கி உள்ள ரசீதும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரசீது ஹேமந்த்தின் தாயார் வசந்தா பெயரில் பெறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்