'அள்ள அள்ளக் குறையாத பணம்'!.. ரூ.600 கோடி மோசடி புகார்!.. 'ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' போலீஸ் வலையில் விழுந்தது எப்படி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிதி நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது செய்யப்பட்ட பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் - எம்.ஆர்.சுவாமிநாதன். சகோதரர்களான இவர்கள் இருவரும் தொழிலதிபர்கள்.
இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனமும், கும்பகோணத்தை அடுத்த கொற்கை கிராமத்தில் பால் பண்ணையும் வைத்து நடத்தி வந்தனர். மேலும், வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைத்து ஹெலிகாப்டர் ஒன்றை வைத்திருப்பதால், `ஹெலிகாப்டர் சகோதரர்கள்' என இந்தப் பகுதி மக்களால் குறிப்பிடப்படுகின்றனர்.
இந்த நிலையில், சகோதரர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டனர். இதன் காரணமாக, கும்பகோணம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த செல்வந்தர்கள், வியாபாரிகள், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இதற்காக இவர்கள், ஏஜெண்ட்டுகளை நியமித்து அவர்களுக்கு தனி கமிஷன் கொடுத்து வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி நிறுவனத்தில் பலரும் கோடிக்கணக்கில் பணம் செலுத்திய நிலையில் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி கணேஷ் - சுவாமிநாதன் சகோதரர்கள், தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்களுக்கு முறையாக பணத்தை திருப்பி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே தங்களிடம் 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துபாய் தம்பதி அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஹெலிகாப்டர் சகோதரர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதன் ஆகியோரை புதுக்கோட்டை வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த போது போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அப்படியே புடிச்சு மேல வாங்க சார்...! 'வெள்ளத்தில் சிக்கி தவித்த அமைச்சர்...' 'பதறிப்போன மக்கள்...' - உச்சக்கட்ட பரபரப்பு...!
- 'ஏடிஎம் கார்ட்... OTP... கிரெடிட் கார்ட்!'.. எதுவுமே தேவை இல்ல'!.. ஒரே ஒரு மெசேஜ்... லட்சக்கணக்கில் பணம் திருடியது எப்படி?.. சென்னையில் திகில் சம்பவம்!
- 'டிரான்ஸ்ஃபர் பண்ண சொல்லல...' 'நேரடியா பேங்குக்கு தானே கூப்டுறாங்க...' 'அப்போ நம்பி எடுத்திட்டு போலாம்...' - பேங்க் வாசலில் காத்திருந்த 'அதிரடி' டிவிஸ்ட்...!
- சிம்பிளா ‘கல்யாணம்’ பண்ணலாம்.. அதுக்குன்னு இவ்ளோ சிம்பிளாவா.. கல்யாண ‘செலவு’ எவ்ளோன்னு கேட்டா ஆடிப்போயிருவீங்க..!
- 'ஆப்பரேஷன் பண்ணிடலாம்...' 'பணத்தை ரெடி பண்ணிட்டீங்க இல்ல...' 'நாலு வருசமா கூவி கூவி காய்கறி வித்து சம்பாதிச்ச காசு...' - நொறுங்கிப்போன முதியவர்...!
- எந்த 'பிரச்சனையும்' பண்ண மாட்டேன்னு 'எழுதி' கொடுத்த அப்புறம் தான் 'கல்யாணமே' நடந்துச்சு...! '15 நாள்கள் கழித்து...' - அதிகாலை 'கண்விழித்த' கணவருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
- இந்தியா முழுவதும் ஒரே 'கைவரிசை ஃபார்முலா'!.. ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில்... வங்கிக் கணக்குகளை முடக்கிய போலீசார்!.. திடுக்கிடும் பின்னணி!
- யாரும் 'அந்த மாதிரி' மெஷின்ல பணம் எடுக்காதீங்க...! 'இப்போதைக்கு பாதுகாப்பு இல்ல...' - எஸ்.பி.ஐ நிர்வாகம் தடை...!
- 'யூடியூப் மூலம்... மோசடி செய்த பணத்தை... Hi-Tech Level-ல் லாவகமாக பயன்படுத்திய கில்லாடி மதன்'!.. அதிர்ந்து போன காவல்துறை!
- என்ன தாத்தா...! 'ஏடிஎம்' கார்டு 'எக்ஸ்பயரி' ஆனது கூட தெரியாம இருக்கீங்க...! 'சரி நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்...' - நூதன மோசடி...!