'Bikeல போகும்போது எத்தனை பேர் இத நினைத்திருப்போம்'... 'இனிமேல் இப்படி தான் சாலை போடணும்'... தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு  நெடுஞ்சாலைத்துறைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாம் சாலைகளில் செல்லும் போது சாலை பழுதடைந்து இருந்தால் அதனைச் சரி செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவதைப் பார்த்திருப்போம். அப்போது அவர்கள் ஏற்கனவே இருக்கும் பழைய சாலையின் மீது தான் புதிதாகத் தார், ஜல்லி போன்றவற்றை போட்டு புதிய சாலையைப் போடுவார்கள். இது தான் பெரும்பாலான இடங்களில் வழக்கமாக நடக்கும் ஒன்றாகும்.

அவ்வாறு சாலை போடும் போது சாலையின் உயரம் அதிகரிக்கும். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லுபவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். இதனை பைக்கில் செல்லும் பலபேர் உணர்ந்திருப்பார்கள். இந்த சூழ்நிலையில் சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும் எனத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு  நெடுஞ்சாலைத்துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்

மேற்பரப்பைச் சுரண்டி விட்டு சாலை போடுவது வீடுகளுக்கு நீர் புகாமல் தடுக்கும் எனக் கூறினார். எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி சாலை போதிய கனத்துடன் இருப்பதால் பிபிடி சோதனை தேவையில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் சாலை போடும் போதே தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்து பணியைத் தொடர வேண்டும் எனக் கூறியுள்ள தலைமைச் செயலாளர் இறையன்பு, பல்வேறு இடங்களில் சாலையில் தரம் குறைவாக இருப்பதால் அடிக்கடி சாலை போடும் அவலம் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே சாலை போடும் போது அதற்கான மட்டத்தைச் சரியான அளவில் போட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதேபோன்று மழைக்காலங்களில் தண்ணீருடன் சேர்ந்து சாலை அடித்துச் செல்கிறது. ஆகவே மேற்தள கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்துவிட்டுத் தான் சாலை போட வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்