மீண்டும் ஆட்டத்தை துவங்கும் மழை.. மணிக்கு 65 கிமீ வரையில் காற்று.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வுமையம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மீண்டும் ஆட்டத்தை துவங்கும் மழை.. மணிக்கு 65 கிமீ வரையில் காற்று.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வுமையம்..!
Advertising
>
Advertising

Also Read | 1165 கிமீ தூரமா.?.. "வாரோம் சாமி சன்னிதானம்".. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 33 ஆண்டுகளாக பாத யாத்திரை..

இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நாளில் இருந்தே, மழை கொட்டித்தீர்த்து வருகிறது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை குறைந்திருக்கும் நிலையில், தற்போது அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. மேலும், இது தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இருந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதிக்கு வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவம்பர் 18) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.இதனால்  வரும் 20 மற்றும் 21 தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கேரள பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதும் தமிழகத்தில் பரவலாக மழையை அளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளைமுதல் மறு உத்தரவு வரும்வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

நாளைமுதல் மணிக்கு 45 கிலோமீட்டர் - 65 கிமீ வரையில் காற்று வீசலாம் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்திருக்கிறது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அனைத்து மண்டல இயக்குனர்களுக்கும் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஆழ்கடல் மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை தொடர்புகொண்டு, அருகில் உள்ள துறைமுகங்களில் தங்களது படகுகளை நிலைநிறுத்திக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Also Read | மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை..! உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..

HEAVYRAIN, HEAVY RAINFALL, TAMILNADU MET DEPT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்