இன்னைக்கு புதுசா ‘ஒண்ணு’ வருது...! பெருசா சம்பவம் பண்ணுமா...? - பலத்த மழை வார்னிங்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை:  தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை கனமழை பெய்வதற்கு வாய்ப்பு  உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

தமிழகத்தில் இதுவரை பெய்த மழையால் இன்னும் வெள்ளம் வடியவில்லை. பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று (30.11.2021) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது.

குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், பிற மாவட்ட பகுதிகளில் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான அளவு வரையிலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

டிசம்பர் 3-ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல் உருவாக உள்ள சூழலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் மற்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த அளவில் வானம், மேக மூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . டிசம்பர் 1-ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், “தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே அது தொடர்ந்து, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் . கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்