'அப்பாடா வெயில்ல இருந்து தப்பிச்சோம்'... 'திடீரென புரட்டி எடுத்த மழை'... உற்சாகத்தில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் நாகர்கோவில் நகரமே குளிர்ந்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வெயில் போட்டு தாக்குகிறது. இதனால் ஏப்ரல், மே மாதம் எப்படி இருக்க போகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தற்போது எழ தொடங்கியுள்ளது. இதற்கிடையே குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து கடுமையான வெயில் மக்களை வாட்டி, வதைத்து வருகிறது.கோடைகால வெயில் முன்கூட்டியே தொடங்கி விட்டதோ? என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் உக்கிரம் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நாகர்கோவில் நகரம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் மழை பெய்யாமல் இருந்தது. நேற்று முன்தினம் மலையோரப்பகுதிகளில் மழை பெய்தது. நேற்று நாகர்கோவில் நகரம், கன்னியாகுமரி, கொட்டாரம், பூதப்பாண்டி, மார்த்தாண்டம், சுருளோடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் மதியம் 2.30 மணி அளவில் தொடங்கிய மழை 3.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.
இதனால் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஓடிய தண்ணீரில் தத்தளித்தபடி சென்றது. தாழ்வான குடியிருப்புகள், வணிக நிறுவனங்களிலும் மழை வெள்ளம் புகுந்தது. இந்த திடீர் மழையால் நகர்ப்பகுதியில் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வெப்பச்சலனம்’ காரணமாக... ‘9 மாவட்டங்களில்’ மழைக்கு வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வுமையம் தகவல்...
- ‘இந்த 3 மாதங்களும்’... ‘பத்திரமா இருந்துக்கோங்க’... ‘எச்சரிக்கும் வானிலை மையம்’... தகவல்கள் உள்ளே!
- 'எம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு இந்த வேலை'... 'மிரள வைத்த பட்டதாரி இளைஞர்'... அதிர்ந்து நின்ற போலீசார்!
- ‘அப்பாவிடம் தகராறு செய்த வேன் டிரைவர்’.. ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி காரியம்..!
- அந்த 'லென்ஸ்' எவ்வளவு தூரமா இருந்தாலும் அப்படியே..! 'நர்ஸ்லாம் எங்க ட்ரெஸ் மாத்துவாங்கன்னு கரெக்ட்டா தெரியும்...' லென்ஸ் வைத்து இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'காதலித்த மனைவி ஒரு வீட்டில்'... 'பேஸ்புக் காதலி இன்னொரு வீட்டில்'... கணவர் செய்த அட்டூழியம்!
- ‘வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்’.. ‘திடீரென கேட்ட அலறல் சத்தம்’.. திருமணமான 8 மாதத்தில் நடந்த விபரீதம்..!
- அடுத்த 24 மணிநேரத்தில்... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- தமிழகத்தில் பனி மூட்டம் எப்படி இருக்கும்?... சென்னை வானிலை மையம் தகவல்!