‘ஆரஞ்ச் அலர்ட்’.. ‘அடுத்த 3 நாளுக்கு வெளுக்க போகும் மழை’.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 16 -ம் தேதியில் இருந்து வடக்கிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனை அடுத்து வங்க கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரளா, கர்நாடக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறத்தப்பட்டுள்ளது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

WEATHER, CHENNAI, TAMILNADU, RAINALERT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்