தொடர் மழை எதிரொலி... 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் தொடர் மழை காரணமாக 14 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை கீழே தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Advertising
>
Advertising

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை.



திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HEAVYRAIN, CHENNAI RAINS, SCHOOL HOLIDAY, RED ALERT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்