வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓரிரு இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை, திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதாகவும், அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் வள்ளாத்தி அணைக்கட்டு பகுதியில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் முகையூரில் 9 செ.மீ மழையும், பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் 6 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தலைநகரில் அனலாக வெயில் கொதித்து வருகிறது. தினசரியாக சென்னையில் அதிகப்பட்சம் 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவன போக சொல்லுயா..'.. ‘நான் மாற்றுத்திறனாளி சார்’.. ‘அதுக்கு?’.. கிரிக்கெட் ரசிகரின் வருத்தமான போஸ்ட்!
- 'அப்போ மழை வேணாம்.. இதான் வேணும்... அப்டிதானே'.. வெதர்மேனின் வைரல் போஸ்ட்!
- தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. ஆனால், எச்சரித்த வானிலை மையம்!
- 'தேசிய அளவில் முதலிடம் பிடித்த கேரள மாணவி.. 2-ஆம் இடத்தில் சென்னை மாணவர்’.. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்!
- மரப்பெட்டியில் ஒளிந்துக்கொண்டு கண்ணாமூச்சி.. விபரீதத்தில் முடிந்த விளையாட்டு.. மூச்சுத் திணறி சிறுமி பலி!
- குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபரால் சென்னையில் நடந்த கோர விபத்து.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- சூறைக்காற்றுடன் கூடிய கனமழை.. உயிரிழந்த வெளிநாட்டுப் பறவைகள்.. நெல்லையில் சோகம்!
- 'இது சும்மா ட்ரைலர் தான்'...'மழை இருக்கானு கேக்காதீங்க'... 'வெதர்மேன்'!
- சட்டென்று மாறிய வானிலை அறிக்கை.. ‘வந்த வேகத்தில் யூ டர்ன் அடிக்கிறதா ஃபானி புயல்?’!
- இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை.. எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!