"இன்னைக்கு நைட்டும் நாளைக்கும் இந்த 4 மாவட்டங்கள்ல இருக்கவங்க Safe-ஆ இருங்க".. வெதர்மேன் சொல்லிய தகவல்.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று இரவும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் எனவும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | 2 நாளைக்கு தட்டி வீசப்போகுது மழை.. இந்த இடங்கள்லாம் மிக கனமழை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்..

இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இது நவம்பர் 3 ஆம் தேதியுடன் முடிவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்றும் நாளையும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர்,"KTCC பெல்ட்டில் (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் கடலூர்) இன்று இரவும் நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நேரம் கொஞ்சம் முன் பின் இருக்கலாம். ஆனால் கனமழைக்கான நிகழ்தகவு மிக அதிகம். மழை பொய்ப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு. ரேடாரில் உள்ள பட்டைகள் இரவு நேரத்தில் தீவிரமடைந்து வருகின்றன. பகல் போல இவை இல்லை. மழையை பாதுகாப்பாக அனுபவிக்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக வட தமிழக கடற்கரையில் பெரிய மேகங்கள் நிலைக்கொண்டுள்ளதாகவும் அவை மெதுவாக நகரும் பட்சத்தில், மழையின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கலாம் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையில் உள்ள சுரங்க பாதைகளில் மழைநீரை வெளியேற்றும் பணிக்காக மோட்டார் பம்புகள், மழையினால் பாதிப்படையும் மக்களை பாதுகாக்க நிவாரண மையங்கள், சமூக நல கூடங்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி அறிவித்திருக்கிறது. இதனிடையே, மழை வெள்ளம் குறித்து மக்கள் புகார் அளிக்க 1913 என்ற எண்ணிற்கு போன் செய்யலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Also Read | "உப்புக்கறி ... கத்திரிக்கா கூட்டு".. சீமான் இதெல்லாம் சமைப்பாரா? சீக்ரெட் சொன்ன மனைவி.. வீடியோ

HEAVY RAIN, KTCC BELT, WEATHER, TAMILNADU WEATHERMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்