அடுத்த 24 மணிநேரத்தில்... 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவாகும். மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதால், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பிரபல ‘சென்னை’ கல்லூரியில்... சடலமாக மீட்கப்பட்ட... ‘ஆசிரியை’ மரணத்தில் ‘திடீர்’ திருப்பம்...
- இந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம்... 20ஆம் தேதி ‘கனமழைக்கு’ வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- தனியார் ‘கல்லூரி’ கிளாஸ் ரூமில்... ஆசிரியை செய்த அதிர்ச்சி காரியம்... சென்னையில் நடந்த சோகம்!
- 'வாவ்.. இன்னைக்கு செம்ம வேட்டை!'.. 'திருடுற அவசரத்தில்'.. 'திருடனுக்கு வில்லனாய் மாறிய மறதி!'
- 'சென்னை சென்ட்ரலுக்கு வந்த பார்சல்'...'ரொம்ப நாள் கழிச்சு திறந்த அதிகாரிகள்'...காத்திருந்த அதிர்ச்சி!
- 'என்ன நடக்குமோ'...'நைட் வெளிய வர பயமா இருக்கு'...அச்சத்தில் 'பெருங்களத்தூர்' பகுதி மக்கள்!
- அடுத்த 24 மணிநேரத்தில்... லேசான மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- 7 ஆண்டுகளாக தொடர் ‘வலி’... சென்னை பெண்ணின் வயிற்றிலிருந்த 20 கிலோ ‘புற்றுக்கட்டி!’...
- 'அப்பாவோட ட்ரீட்மெண்ட்க்கு காசு இல்ல'...'பெண்ணின் மாஸ்டர் பிளான்'...சென்னையில் நடந்த மோசடி!
- ‘சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும் அரசு பேருந்துகள்’.. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அசத்தல்..!