'சனிக்கிழமை முதல் கனமழை'... ‘மீனவர்களுக்கு எச்சரிக்கை’... 'வானிலை மையம் தகவல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்ததால், கடந்த சில வாரங்களாக மழை பெய்யவில்லை. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில், வரும் சனிக்கிழமை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு,  பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட  மாவட்டங்களில் மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், நவம்பர் 30-ம் தேதி முதல் 2  நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் தமிழகத்திற்கு, இனிதான் பெரிய மழை காத்திருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

RAIN, ALERT, CHENNAI, IMD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்