'அடுத்த' 24 மணிநேரத்தில்... 6 மாவட்டங்களில் 'கனமழை'க்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னை மக்களே'...'எழும்பூர் - கோடம்பாக்கம் ஜாலியா போலாம்'...'டிக்கெட் கட்டணம்' அறிவிப்பு!
- ‘கணவர் தம்பியுடன் சேர்ந்து பலே திட்டம்’!.. ‘சிசிடிவி-ல் காட்டிக்கொடுத்த வளையல்’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!
- அடுத்த 3 நாட்கள்... கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- வீட்டுக்குள் இருந்து கேட்ட ‘அலறல்’ சத்தம்... ‘பதறியடித்து’ ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘சென்னையில்’ சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...
- ‘திருமணமான’ ஒரே மாதத்தில்... வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி ஊழியருக்கு’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...
- இனி எவ்ளோ லேட்டானாலும் கவலையில்ல... ஒரே ‘க்ளிக்’ தான்... நிமிடங்களில் உதவிக்கு வந்து அசத்தும் ‘தமிழக காவல்துறை’...
- ‘குறைந்த விலையில்’.... ‘ரேஷன் கடைகளிலும் இனி வாங்கலாம்’... அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
- '5வது மாடி பால்கனிக்கு தவழ்ந்து வந்த 8 மாதக் குழந்தை'.. 'தடுப்பின் வழியே தவறி விழுந்து'.. 'உறைய வைக்கும் சம்பவம்'!
- ‘டீ குடிக்கப் போன சேல்ஸ் மேன்’.... ‘ஸ்கூட்டர் மீது மோதி’... ‘30 அடி தூரம் இழுத்துச் சென்ற கார்’... ‘பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்’!
- ‘பஸ்ல போறீங்களா’! ‘இனி 100 மீட்டருக்கு முன்னாடியே தெரிஞ்சிரும்’!.. அசத்திய சென்னை போக்குவரத்து கழகம்..!