இந்த மாவட்டங்களில் எல்லாம் ‘கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல அடுத்த 48 மணி நேரத்தில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 30-ஆம் தேதி வரை மழை நீடிக்கும். குமரிக்கடல் பரப்பில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம்.

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WEATHER, RAIN, HEAVYRAIN, IMD, CHENNAI, DISTRICTS, LIST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்