‘புதிய காற்றழுத்தம்'... 11 மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்து காணப்படுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லாததால், கனமழைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் வருகிற திங்கள்கிழமை, மேலடுக்கு சுழற்சி உருவாகும் அறிகுறி தென்படுவதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது கடலோரம் வரை பரவி வரும் போது, 18, 19-ம் தேதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உருவாகும்.

இதற்கிடையில் வெப்பசலனம் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், வேலூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAIN, CHENNAI, TAMILNADU, IMD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்