'4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'வானிலை மையம் தகவல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரைப் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், குமரிக் கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு, மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAIN, ALERT, PUDUCHERRY, TAMILNADU, IMD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்