எலெக்‌ஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் தமிழகத்தில் முழு ஊரடங்கா...? - விளக்கம் அளித்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேர்தல் முடிந்தபின்பு தமிழகத்தில் முழு ஊரடங்கு என கூறப்படுவது உண்மையா என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் பற்றி கூறுகையில், தமிழக சட்டசபை தேர்தல் நாளை (06-04-2021) நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து ஓட்டுப்போட செல்ல வேண்டும். மாஸ்க் அணியவில்யென்றால் ஓட்டுபோட  அனுமதிக்கப்பட மாட்டார்கள். அங்கு செல்லும் அனைவருக்கும் உடல்நிலையின் வெப்பம் அளவிடப்படும்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது உலக நாடுகளில் பலவற்றை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. தமிழகத்திலும் மளமளவென உயர்ந்து 85 ஆயிரம் சோதனைகளில் 3,500 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனையை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் மத்திய அரசிடம் இருந்து 54 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தாலும், 32 லட்சம் டோஸ் மட்டுமே போடப்பட்டுள்ளது.  2வது டோஸ் தடுப்பூசி செலுத்திய 14 நாட்களுக்கு பிறகு 75 முதல் 80 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட கண்டிப்பாக  வாய்ப்பில்லை. எனவே கொரோனா தடுப்பூசியை 45 வயதிற்கு மேற்பட்ட மக்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும்.

கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு முழு ஊரடங்கு எனக் கூறப்படுவதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், அதைக்குறித்து பதற்றப்பட தேவையில்லை எனவும் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை. தேர்தல் முடிந்து ஏழாம் தேதிக்கு பின்பு கொரோனா தடுப்பு நடவடிக்கை இன்னும் வேகமாக தீவிரமாக்கப்படும், என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்