இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. ஹுண்டா வைரஸ் பாதிப்பால் சீனாவில் ஒருவர் உயிரிழப்பு

2. இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 519 ஆக உயர்வு.

3. தமிழகம் முழுவதும் 144 தடை அமலுக்கு வந்தது. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன.

4. தமிழகத்தில் 144 தடை உத்தரவையொட்டி ஏப்ரல் 1 வரை பேருந்துகள், கால் டாக்ஸி, ஆட்டோ, லாரிகள் ஓடாது; அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரலாம்.

5. மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் ஒரு மாத சம்பளம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என சட்டமன்றத்தில் தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

6. கடந்த 40 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா நோயால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

7. இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

8. டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த வங்கியின் ஏ.டி.எம் மூலமும் சேவை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

9. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு.

10. 144 தடை உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை.

HEADLINES, HUNTA VIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்