1, டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில் , புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
2, ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம் அதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு என்ன நிலை என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3, டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 30 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெவித்துள்ளது.
5, கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்துள்ளார். எனினும் அவரது கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகவில்லை.
6, கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளது.
7, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 132 பேர் குணமடைந்துள்ளனர்.
8, தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும, டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர் என்றும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
9, தமிழகத்தில் இதுவரை 15 மாவட்டங்களுக்கு மட்டுமே பரவியிருந்த கொரோனா, மேலும் 4 மாவட்டங்களுக்கு பரவி 19ஆக உயர்ந்தது.
10, இந்தியாவில் பிப்ரவரியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வசூலாகியிருந்த ஜிஎஸ்டி வருவாய், மார்ச் மாதம் ரூ.97,597 கோடியாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இரும்பு கம்பியால் வேலி'...'தண்ணீர், காய்கறி எல்லாம் ரெடி'... 'தனிமைப்படுத்தப்பட்ட '1800 குடும்பங்கள்'!
- 'வுஹானில்' இறந்தவர்களின் எண்ணிக்கை 'இதுதானா?'... ஆயிரக்கணக்கான 'அஸ்தி' கலசங்களால் எழுந்துள்ள 'புதிய' சந்தேகம்...
- 'நான் செத்து போயிடுவேன்னு நெனச்சேன், ஆனால்...' 'தயவுசெய்து எல்லாரும் வீட்டுக்குள்ளையே இருங்க...' கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோள்...!
- 'திடீரென' மாறிய காற்றின் திசையால்... தீயணைப்பு வீரர்கள் உட்பட '19 பேருக்கு' நேர்ந்த 'பயங்கரம்'... கொரோனாவிலிருந்து 'மீள்வதற்குள்' நிகழ்ந்த சோகம்...
- ‘144 தடை உத்தரவை மீறி’... ‘அசுரவேகத்தில் வந்த கார்’... ‘நொடியில் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பயங்கரம்’... ‘பதற வைக்கும் காட்சிகள்’!
- கொரோனோவால் 'ஆடம்பர' ஹோட்டலில்... '20 பெண்களுடன்' தனிமைப்படுத்திக் கொண்ட மன்னர்?
- ‘நகர்ந்து நகர்ந்து ஓடும் குட்டிப்புதர்!’.. ஊரடங்கு நேரத்தில் நபர் செய்த வைரல் காரியம்.. ‘தீயாக’ பரவும் வீடியோ!
- 'ஐபிஎல்' நடக்கலேன்னா... கண்டிப்பா 'குடுக்க' மாட்டோம்... கிரிக்கெட் சங்கத்தின் 'அறிவிப்பால்' வீரர்கள் கலக்கம்!
- ‘சென்னையில் ஒருவருக்கு கொரோனா உறுதி’.. ‘அவர் சென்ற இடம் வெளியீடு’.. ‘அந்தநாள் அங்கபோன எல்லோரும் இத பண்ணணும்’.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
- கிடைத்தது 'கிரீன்' சிக்னல்... 'கொரோனாவை' குணப்படுத்த... 'பழைய' சிகிச்சை முறையை 'கையில்' எடுக்கும் அமெரிக்கா!