'23 வருசத்துக்கு முன்னாடி பற்ற வைத்த நெருப்பு'... 'எஸ்பி'யின் வாட்ஸ்அப்'பிற்கு வந்த மெசேஜ்'... கொத்தாக சிக்கிய காவலர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்23 வருடங்களுக்கு முன்பு காவல்துறை பணியில் சேர்வதற்காகக் காவலர் ஒருவர் செய்த மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி அபிராமம் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது மதுரையில் தலைமைக் காவலராகப் பணி செய்து வரும் நிலையில், இவர் பணியில் சேரும் போது போலியான சாதி சான்றிதழ் மற்றும் தந்தை பெயரை மாற்றி போலியான ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமாரின் பிரத்தியேக எண்ணிற்குப் புகார் ஒன்று வந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.பி வருண் குமார் உத்தரவின் பேரில், காவலர் முருகனிடம் நடத்திய விசாரணையில் மோசடி உண்மையென்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண் குமார் பதவி ஏற்கும் போது, பொது மக்கள் எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என அவர் அறிவித்திருந்த அவரின் பிரத்தியேக எண் (9489919722) பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதது. அதன் மூலம் பல புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், காவலர் மீதும் தற்போது விசாரணை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “வரம்பு மீறிய அதிகாரம்... கேள்விக்கு அப்பாற்பட்டவங்களா நினைச்சுக்குறாங்க...” - சாத்தான்குளம் விவகாரத்தில் பொறிந்து தள்ளிய வெற்றிமாறன்!
- “உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுங்குறான்...” - நீதிபதியவே இப்டி மிரட்றான்னா...? அந்த பெண் காவலரை...?? - ’சாத்தான்குளம் போலீசை’ திட்டி தீர்த்த வழக்கறிஞரின் அதிரடி பேட்டி!
- 'ரத்தக்கசிவால்' 3 முறை மாற்றப்பட்ட லுங்கி... 110 கி.மீ பயணம்... கார் ஓட்டுநர் வெளியிட்ட 'அதிர்ச்சி' தகவல்கள்!
- புகார் குடுக்க வந்த 'பொண்ணு' முன்னாடி... போலீஸ் ஒருத்தரு 'சுயஇன்பம்' பண்ணிருக்காரு... உபி-ல நடந்த அதிர்ச்சி 'சம்பவம்'!
- ‘சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடும்...’ - நடிகர் கமல்ஹாசனின் வைரல் ட்வீட்!
- தமிழக அரசு அதிரடி! - ஒரே இரவில் 39 போலீஸ் உயர் அதிகாரிகள் டிரான்ஸ்பர்! முழு விபரம் உள்ளே!
- 159 வருடங்களில் முதல்முறை... வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் 'சாத்தான்குளம்' காவல் நிலையம்... காரணம் என்ன?
- 2 நாட்களில் 'இறந்து' போன புது மாப்பிள்ளை... உண்மையை 'மறைத்த' பெற்றோரால்... அடுத்தடுத்து '111 பேருக்கு' காத்திருந்த அதிர்ச்சி!
- 'உலகத்துல இருக்குற எல்லா வண்டியையும் ஓட்டிப்பாக்கணும்!'.. விநோத ஆசையால தடம் புரண்ட இளைஞரின் வாழ்க்கை!
- '80 காவலர்கள் பணியிலிருந்து விடுவிப்பு'... 'அதிரடி நடவடிக்கை'... 'டிஐஜி' முன்னெடுத்துள்ள புதிய முயற்சி!