ஒருவேளை 'இவரு' இல்லன்னா... 'நிலைமை வேற மாதிரி கூட இருந்துருக்கலாம்...' காரணம் என்ன...? - மாஸ் காட்டிய ஹரிநாடார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஒரு சில தொகுதிகளில் தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவந்துள்ள நிலையில், ஆலங்குளம் தொகுதியில் திமுக தோற்க சுயேச்சை வேட்பாளர் காரணம் என விவாதிக்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குபதிவுகள் கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், அடுத்ததாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது.

திமுக தோல்வியுற்ற தொகுதிகளில் அதற்கான காரணங்களும் பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், திமுக சார்பில் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தோல்வியை தழுவியுள்ளார். அதே நேரம் அதிமுக சார்பில் போட்டியிட்ட பவுல் மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார்.

திமுகவின் தோல்விக்கு இந்த தோல்விக்கு சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் தான் காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு படை கட்சி சார்பாக ஹரி நாடார், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தல் பரப்புரையின் போது அவர் சார்ந்துள்ள சமுதாயத்தின் நலனுக்காக தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா, 3,605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனிடம் தோல்வியை தழுவியுள்ளார்.

அதேநேரம் பூங்கோதை ஆலடி அருணா 70,380 வாக்குகளும், மனோஜ் பாண்டியன் 73,985 வாக்குகளும், சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் 37,632 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இதுவே ஹரி நாடார் போட்டியிடவில்லை என்றால் திமுக வேட்பாளர் ஜெயிக்கவும் வாய்ப்பிருக்கலாம் என விவாதிக்க படுகிறது. காலை வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு சில சுற்றுகளில் ஹரி நாடார், பூங்கோதை ஆலடி அருணாவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்