'பெற்றோர்களிடையே நிலவிய குழப்பம்'... 'அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா'?... அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா? என்பது தொடர்பாக நிலவி வந்த குழப்பத்திற்கு அமைச்சர் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் நாடு முழுவதும் பள்ளி-கல்லூரிகளை மூட கடந்த மார்ச் 16-ந்தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் கொரோனா பரவல் தீவிரமானதையடுத்து மார்ச் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால், இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அதே நேரம் புதிய கல்வியாண்டு தொடங்கியதைத் தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இதனிடையே கடந்த ஜூன் 8-ந்தேதி முதல் ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. அதே நேரத்தில் அரையாண்டு தேர்வுகளும் நெருங்கி வருவதால் அவை எப்படி நடத்தப்படும் என்பது குறித்தும் பெற்றோர் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
அதில், ''தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாளை மறுநாள் அறிக்கை வழங்கப்பட இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். மேலும் அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது'' என விளக்கமளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘10 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள்’... ‘ரஷ்யாவுடன் இணைந்து’... ‘இந்தியாவில் உற்பத்தி செய்யப்போகும் மருந்து நிறுவனம்’...!!!
- ‘கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிச்சாலும்...’ .. அதிர்ச்சியை கிளப்பிவிட்ட அதிபர்! ‘மீண்டும்’ சர்ச்சைக்குள்ளான பேச்சு!
- 'தமிழகத்தின் இன்றைய (27-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'நெனைச்சு பாக்க முடியாத அளவுக்கு நடந்த விற்பனை!'... தீபாவளி நேரத்தில் அடிச்சுத் தூக்கிய ஆன்லைன் சேல்! காரணம் இதுதான்!
- 'மிகப்பெரிய வேலை நீக்கத்தை கையில் எடுக்கும் பிரபல நிறுவனம்'... 'ஜாம்பவானுக்கே இந்த நிலைமையா'?... வெளியான பகீர் தகவல்!
- ‘கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி???’... ‘அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல்’... ‘அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப்’... !!!
- ‘கொண்டாடப்பட்ட தடுப்பூசி’... ‘ஆரம்பத்திலேயே வந்த சோதனை’... ‘தவறை ஒப்புக்கொண்ட நிறுவனம்’...!!!
- 'தமிழகத்தின் இன்றைய (26-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'சென்னையில எந்த ஏரியா? சென்னை மொத்தமும் ஏரியா தான் சார் இருக்கு!' .. 'இணையத்தை தெறிக்கவிடும் நிவர் ஸ்பெஷல் மீம்ஸ்!'
- '8 மாதம் கொரோனா வார்டில் வேலை'... 'வெளியான நர்ஸின் புகைப்படம்'... 'இதுதான்பா தியாகம்'... போட்டோவை பார்த்து உடைந்து போன நெட்டிசன்கள்!