“நான் பண்ணது கொஞ்சம்தான்.. நேரம் இருந்தா ரச்சிதாவிடம் நிறைய Romance பண்ணிருப்பேன்.. ”.. bigg boss ராபர்ட் EXCLUSIVE

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | மெடிக்கல் போயிட்டு வர்றேன்னு போன கணவர்.. Wait பண்ண மனைவிக்கு 1 1/2 வருஷம் கழிச்சு காத்திருந்த ஷாக்!!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைல்டு கார்டு எண்ட்ரியாக  மைனா பங்கேற்றுள்ளார்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினா, அதன் பின்னர் மகேஸ்வரி வெளியேறினர். கடைசியாக நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், 50வது நாளன்று ஞாயிற்று கிழமை எபிசோடில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து விலகியுள்ள ராபர்ட் மாஸ்டர், Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் ரச்சிதா உடனான கிரஷ் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி உள்ளார் ராபர்ட் மாஸ்டர். அதன்படி, “வெளியில் வந்து முழுமையாக இது குறித்த ரெஸ்பான்ஸை பார்க்க முடியவில்லை என்றாலும். சில ரொமான்ஸ் பாடல்களை பார்க்க முடிகிறது.

நானும் ரச்சிதாவும் பங்குபெறும் வீடியோக்களை வைத்து சில ரொமான்ஸ் பாடல்களை மீம்ஸ்களாக வெளியிடுகிறார்கள். அவற்றையெல்லாம் பார்த்தேன் நன்றாகவே இருக்கிறது. மற்ற நேரங்களில் நான் டாஸ்க் ஆடி தான் கொண்டிருந்தேன். அவரை தொடுவதோ கட்டிப் பிடிப்பதோ எதையுமே நான் செய்ததில்லை. கிடைத்த கொஞ்ச நேரத்தில் விளையாட்டாக ரொமான்ஸாக எதையாவது பண்ணினேன். எனக்கு அது குறைவுதான்.. நேரமிருந்திருந்தால் இன்னும் நிறையவே ரொமான்ஸ் பண்ணியிருப்பேன்.” என்றார்.

Also Read | “தொடல.. கட்டிப்பிடிக்கல.. க்ரஷ் மட்டும்தான்.. மனசுல என்ன இருக்குனு ரச்சிதா சொல்லணும்”.. ராபர்ட் EXCLUSIVE

BIGG BOSS 6, BIGG BOSS 6 TAMIL, BIGG BOSS TAMIL, AZEEM, DHANALAKSHMI, JANANY, SHIVIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்