ஹலோ, நான் 'மிலிட்டரி'ல இருக்கேன்... பாதி விலைக்கு 'புல்லட்' இருக்கு... வாங்கிக்குறீங்களா?.. புதுக்கோட்டையை குறிவைத்த 'மோசடி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டை மாவட்டம் திருமலை சமுத்திரபுரம் கிராமத்தை சேர்ந்த கணேஷ் குமார் என்ற இளைஞரிடம் வாட்ஸ் அப் மூலம் ஒரு நபர் அறிமுகமாகி நட்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், தானொரு ராணுவ அதிகாரி என்றும், தன்னிடம் ஒரு புல்லட் விற்பனைக்கு உள்ளதாகவும் அதனை ஓஎல்எக்ஸ் வழியாக விற்பனை செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய கணேஷ் குமார், அந்த புல்லட் தான் வாங்குவதாகவும், அதற்காக கூகுள் பே மூலம் சுமார் 80 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.

அதன் பின்பு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அதிர்ச்சியடைந்த கணேஷ் குமார் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராகுல் முத்து என்பது தெரிய வந்தது. ராணுவ அதிகாரி போல் நடித்து இது போன்று பல இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ள தகவலும் வெளியானது.

சம்மந்தப்பட்ட நபரின் முகவரியை ஆதாரமாக கொண்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக, சுமார் ஆறு மாதங்களுக்கு முன் இதே போன்று புதுக்கோட்டையை சேர்ந்த நபர் ஒருவரிடம் இதே போன்று தன்னை ராணுவ அதிகாரி என்று ஆறுமுகம் செய்த நபர் ஒருவர் விலையுயர்ந்த கார் ஒன்றை சுமார் 7 லட்சம் ரூபாய்க்கு விற்பதாக கூறி ஒருவர் மோசடி செய்திருந்தார். அந்த மோசடி வழக்கில் இந்த நபருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்