‘அன்பா’ பழகுவேன், அப்புறம் ‘செல்போன்’ நம்பரை வாங்குவேன்.. போனில் பல ‘பெண்களின்’ வீடியோ.. அதிரவைத்த இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி மற்றும் 2 கல்லூரி மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி புகார்களை கொடுத்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் (26) என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், கார்த்திக் என்பவருக்கும் அப்பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியை கார்த்திக் காதலிப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய பள்ளி மாணவி கார்த்திக்குடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் மாணவியை திருமணம் செய்வதாக கூறிய கார்த்திக் அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். அதை மாணவிக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனை அடுத்து மாணவியிடம் வீடியோவைக் காட்டி கார்த்திக் மிரட்டியுள்ளார். அதனால் கார்த்திக் சொல்வதைக் கேட்கும் நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவியை தன்னுடைய நண்பர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். இந்த சமயத்தில் மாணவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி கதறி அழுதுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்துள்ளோம். கார்த்திக் கைதான தகவல் வெளியானதும் அவர்களது நண்பர்கள் தலைமறைவாகிவிட்டனர். 10ம் வகுப்பு மாணவியை அடுத்து 2 கல்லூரி மாணவிகளும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகார் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் கார்த்திக் கொடுத்த வாக்குமூலம் குறித்து தெரிவித்த போலீசார், கார்த்திக்கின் செல்போனை ஆய்வு செய்தபோது 10ம் வகுப்பு மாணவி தவிர இன்னும் சில பெண்களுடன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் இருக்கும் வீடியோக்கள் இருந்தன. இதுகுறித்து கார்த்திக்கிடம் விசாரித்தபோது சிறுமிகள், கல்லூரி மாணவிகள் என அனைவரிடம் அன்பாக பழகுவேன். பின்னர் செல்போன் நம்பரை வாங்கி அவர்களுடன் பேசுவேன். வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றில் ஷேட்டிங் செய்வேம். அதன்பிறகு காதலிப்பதாக கூறுவேன் என கூறினார். தற்போது கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களால் பாதிக்கப்பட்ட பெண்களிடமும், மாணவிகளிடமும் ரகசியமாக விசாரித்து வருகிறோம். இதுவரை 3 புகார்கள் வந்துள்ளன என தெரிவித்துள்ளனர்.
News Credits: Vikatan
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சார் என் பொண்டாட்டிக்கு ‘பிரசவம்’.. ‘ரொம்ப சீரியஸ்’.. போனில் கேட்ட ‘அழுகுரல்’.. சட்டென களத்தில் இறங்கிய போலீசார்..!
- கொரோனாவால் இறந்தவங்கள ‘அடக்கம்’ பண்ண எதிர்ப்பு தெரிவிச்சா.. இனி ‘அதிரடி’ ஆக்ஷன் தான்.. காவல்துறை கடும் எச்சரிக்கை..!
- 'மனவருத்தமளிக்கிறது' மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்: தமிழக முதல்வர்
- நல்ல 'உணவு' குடுக்குற அளவுக்கு 'வருமானம்' இல்ல... என்னால 'முடிஞ்சது' இதுதான்!
- தலைமை காவலருக்கு ‘கொரோனா’.. தீவிர கண்காணிப்பில் உடன் வேலை பார்த்த 24 போலீசார்.. மூடப்பட்ட ‘காவல்நிலையம்’!
- "டைம் முடிஞ்சுது, கடையை சீக்கிரம் மூடுங்க"... எச்சரித்த 'போலீசார்'... 'மறுத்த' கடைக்காரர்கள்... அடுத்து நடந்த 'பரபரப்பு' சம்பவம்!
- காய்ச்சல் இருக்கவங்க இனி... 'ஓடவும்' முடியாது ஒளியவும் முடியாது... செம 'ட்ரிக்குடன்' களமிறங்கும் 'சென்னை' போலீஸ்!
- 'திருமணத்திற்காக' 850 கி.மீ சைக்கிளில் 'பயணம்' செய்த மணமகன்... கடைசியில் 'காத்திருந்த' அதிர்ச்சி!
- 'மாப்பிள போன் பண்ணி'... 'மனைவி மாசமா இருக்கா, GH போணும்ன்னு சொன்னான்'... 'அடுத்து நடந்த திருப்பம்'... நெகிழவைக்கும் இளைஞரின் பதிவு!
- '7மாச கர்ப்பிணி, அப்போ ஏன் டூட்டி பாக்குறீங்க'... 'போலீஸ் அதிகாரி அம்ரிதா சொன்ன பதில்'... நெகிழ்ந்து போன மக்கள்!