"Road ஓரத்துல தான் தங்குறேன்".. தலைமறைவான கணவன்.. ஆட்சியரிடம் கண்ணீருடன் புகார் அளித்த கர்ப்பிணி பெண்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன்னை விட்டு பிரிந்துசென்ற கணவரை மீட்டுத்தர கோரி கர்ப்பிணி பெண் ஒருவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்திருப்பது பலரையும் கலங்க செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | Kallakurichi: இறந்த மாணவியின் தாய் எழுப்பிய கேள்விகளும்.. பள்ளி நிர்வாகத்தின் விளக்கமும்.. முழு விபரம்..!

குஜராத் மாநிலம் சபர்மதி காளிகாம் பகுதியை சேர்ந்த ராஜாபாய் - சரோஜ் தம்பதியின் மகள் சரிதா. இவருடைய கணவர் திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே மரணமடைந்திருக்கிறார்.  இந்நிலையில், வேலைக்காக குஜராத் வந்திருந்த தஞ்சாவூர் ஒரத்தநாட்டை சேர்ந்த விஜயகுமார் என்னும் இளைஞருடன் சரிதா நட்பாக பழகிவந்திருக்கிறார். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி விஜயகுமார் கூறவே, சரிதாவும் சம்மதித்திருக்கிறார்.

இந்நிலையில், திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதி தஞ்சாவூர் வந்தபோது தான், விஜயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் இருப்பது சரிதாவுக்கு தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, சரிதாவை தனி வீட்டில் தங்க வைத்திருக்கிறார் விஜயகுமார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக விஜயகுமார் தலைமறைவாகிவிட்டதாக கூறுகிறார் சரிதா.

புகார்

இதனை தொடர்ந்து காணாமல் போன தனது கணவரை மீட்டுத்தரும்படியும், கணவரின் குடும்பத்தாரிடமிருந்து தனக்கு பாதுகாப்பு வழங்கிடவேண்டும் எனவும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் சரிதா. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சரிதா கலெக்டரிடம் தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். இதனால் அங்கிருந்தவர்கள் கவலையடைந்தனர். மேலும், தங்க இடம் இல்லாமல் சாலை ஓரங்களில் வசித்துவருவதாக சரிதா கூற, அனைவரும் கலங்கிப்போயிருக்கிறார்கள்.

என்னால ஒன்னும் செய்யமுடியல

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சரிதா,"எனக்கு சிறுவயதிலேயே திருமணம் நடைபெற்ற சில ஆண்டுகளில் என்னுடைய கணவர் இறந்துவிட்டார். அப்போது குஜராத்துக்கு வேலைக்கு வந்த தஞ்சாவூரை சேர்ந்த விஜயகுமார் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு தஞ்சாவூர் திரும்பிய பிறகுதான் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. நான் இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்" என்றார்.

மேலும், தனது கணவரின் வீட்டார் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், தங்க இடம் இல்லாததால் சாலை ஓரத்தில் வசித்து வருவதாகவும் கூறும் சரிதா காவல்துறையினர் விரைந்து தனது கணவரை கண்டுபிடித்துத்தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

Also Read | கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏற்பட்ட புதிய திருப்பம்.. 2 ஆசிரியர்களை கைது செய்த காவல்துறை.. முழு விபரம்..!

GUJARAT, GUJARAT LADY GAVE PETITION, COLLECTOR, HUSBAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்