TNPSC: Group 2,2ஏ தேர்வுக்கு படிப்பவரா நீங்க... உங்களுக்கான மகிழ்ச்சி செய்தி.. டிஎன்பிஎஸ்சி நாளை முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: குரூப்-2, 2ஏ தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தேர்விற்கு தேர்ச்சி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் இனிவரும் காலங்களில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். அதேபோல பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பாக குரூப்-1 தேர்வுகளை மே மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
குரூப்-2, குரூப்- 2 ஏ தேர்விற்கான அறிவிப்பு இம்மாதத்திலேயே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குரூப்- 4 தேர்வு குறித்து மார்ச் மாதத்தில் அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தினை விட 30 நிமிடத்திற்கு முன்னதாகவே வருகைபுரிய வேண்டும். அவ்வாறு வருகை தராதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை ஆதார் எண்ணைப் பதிவு செய்யாதவர்கள் பிப். 28-ம் தேதிக்குள் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
அதன்படி 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், நாளை (பிப்.18) மதியம் அறிவிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2, 2 ஏ - குரூப் 4 - காலிப் பணியிடங்கள்
- குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் - 5,831.
- குரூப் 4 தேர்வில் பழைய காலிப் பணியிடம் 5,255,
- புதிய காலிப் பணியிடம் 3,000 காலிப் பணியிடங்கள் மாற்றி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குரூப் 2 தேர்வை எழுத உள்ளோர் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் -2 கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளின் கீழ் தேர்வு செய்யப்படுவார்கள்.
மற்ற செய்திகள்
Breaking: கைது செய்யப்பட்ட ABVP நபர்களை சந்தித்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர் சுப்பையா சஸ்பெண்ட்..!
தொடர்புடைய செய்திகள்
- திருமணத்தை மீறிய உறவு.. ஆண் நண்பருடன் வாக்குவாதம்.. பெண் வனக்காவலருக்கு நடந்த விபரீதம்..!
- தோனியின் ஆசையில் மண் அள்ளி போட்ட IPL அணி... CSK வளர்த்த பையனை கொத்தாக தூக்கிட்டாங்க! சோகத்தில் சென்னை ரசிகர்கள்
- என் புருஷன முடிச்சிடலாம்.. மனைவியின் செல்போனில் சிக்கிய ஆதாரம்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிய வந்த உண்மை
- டாஸ்மாக் , மதுபான பார்களை நான்கு நாட்களுக்கு மூட உத்தரவு..!
- "இவ்ளோ பில்டப் தேவையில்லை.. வேணும்னா வெளில போங்க" - நயினாருக்கு பதில் கொடுத்த சபாநாயகர் அப்பாவு..!
- "பழைய பன்னீர்செல்வமா திரும்பி வருவேன்'.. கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி
- 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளிக்கல்வி துறை போட்ட முக்கிய உத்தரவு
- Video: விழித்துக் கொள்ளுங்கள்.. இந்துக்களுக்காக குரல் கொடுக்க என் வாய் உள்ளது.. நித்யானந்தா பரபரப்பு வீடியோ!
- தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் மூடப்பட வேண்டும். அதிரடி காட்டிய ஐகோர்ட்.. உத்தரவின் பின்னணி
- VIDEO: தமிழ்நாட்டைப் பத்தி ஏன் அதிகமாக பேசுனீங்க..? நிருபர் கேள்விக்கு ராகுல் காந்தியின் ‘நச்’ பதில்..!