‘பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட’... ‘அத்தியாவசிய பொருட்கள் கடைகளும் மூடப்படுகிறதா?... ‘சென்னை மாநகராட்சி ஆணையர் வார்னிங்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி மளிகை, உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளை அடைப்பதாகவும், அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் பால், காய்கறிகள், பழங்கள், மளிகை விற்பனை செய்யும் சிறு வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும். இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளும் தொடர்ந்து செயல்படும். கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். கடைகள் மூடப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய வணிக நிறுவனங்களை மட்டுமே மூட உத்தரவு. சிறிய கடைகளுக்கு அல்ல. சென்னையில் மால்கள், சினிமா தியேட்டர்களை மட்டுமே மூடியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதியே பெரிய வணிக நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நமது முக்கியக் குறிக்கோள் வைரஸ் பரவலைத் தடுப்பது மட்டுமே. சாதாரண பொதுமக்களைப் பாதிக்கும் நடவடிக்கை அல்ல. இந்த இக்கட்டான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்டுவோம்" இவ்வாறு சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “தமிழகத்தில் 2-வது நபருக்கு”... “கொரோனா வைரஸ் தொற்று உறுதி”... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வ தகவல்!
- 'சொந்தம் விட்டு போக கூடாது தான்'...'சொந்தக்காரங்க வந்தா என்ன பண்றது'?... சுகாதார துறை அதிகாரி விளக்கம்!
- "ஆந்திரா 'செல்ஃபோன்' திருட்டு 'ட்ரெயினிங் சென்டர்ல' தான் கத்துக்கிட்டோம்..." என்னவோ 'ஆக்ஃபோர்டு' யூனிவர்சிட்டில 'பி.ஹெச்.டி'. படிச்ச மாதிரி... பெருமையாக 'வாக்குமூலம்' கொடுத்த 'திருடர்கள்...'
- ‘சேர்ந்தே இருப்பது கூட்டமும் தி.நகரும்’.. ‘பிரிச்சு வெச்சது கொரோனாவும் அச்சுறுத்தலும்’.. பரபரப்பு உத்தரவு!
- '3 மணி நேரமா கதவ திறக்கல!'... ரயில் கழிவறையில்... பெண் எடுத்த விபரீத முடிவு!... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை உறையவைத்த கோரம்!
- கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ‘கிருமிநாசினி’.. கண்டுபிடித்து அசத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்..!
- 'கொரோனா' வைரஸை சாக்கா வச்சு யாராவது இப்படி செஞ்சீங்க'... தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
- ‘திருடிய செல்போனில் செல்ஃபி’.. ‘காட்டிக்கொடுத்த இமெயில்’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!
- முதல்ல ‘விளையாட்டா’ தான் பண்ணேன்... அப்புறம் ‘ரசிகைகள்’ கொடுத்த ‘வரவேற்பை’ பாத்துதான்... ‘பரபரப்பு’ புகார்களில் சிக்கி ‘அதிரவைத்த’ இன்ஜினியர்...
- ‘கொரோனா பரவிட்டு இருக்கு’... ‘ஆனா, சென்னைவாசிகள் ஏன் இப்டி இருக்காங்க?’... 'தமிழக வீரர் அஸ்வின் வேதனை'!