சென்னையில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் ‘கட்டுப்பாடு’ தளர்வு.. லிஸ்ட்ல உங்க ‘ஏரியா’ இருக்கான்னு ‘ஷெக்’ பண்ணிக்கோங்க..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கடந்த 28 நாள்களாக கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தழிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 9,227 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 5,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தமிழகத்தின் சில மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது. அந்தவகையில் சேலம், கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் கொரோனா இல்லா மாவட்டமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 28 நாள்களாக கொரோனா தொற்று இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வேதாந்தா முருகப்பா தெரு, டிரஸ்ட் புரம் 1வது தெரு, கோட்டூர்புரத்தின் அங்காளம்மன் கோவில் தெரு, பல்லவாக்கத்தின் கோலவிழி அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்