'சின்ன வயசுல இருந்தே பாட்டிக்கு என் மேல உயிர்...' 'வீடியோ காலில் இறுதி சடங்கு செய்த செல்ல பேரன்...' கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு உத்தரவால் தன்னுடைய பாசமுள்ள பாட்டிக்கு, சென்னை இளைஞர் வீடியோ காலில் இறுதி சடங்கு செய்த சம்பவம் அவர்களது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தமிழகம் முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள 103 வயதுடைய சிவனம்மாள் என்ற பாட்டி மூதாட்டி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இரண்டு மகன்கள் உள்ள நிலையில் விளாங்குடியிலுள்ள  தன்னுடைய இளைய மகனின் வீட்டில் இன்று காலமாகியுள்ளார்.  

மறைந்த இந்த பாட்டியுடைய செல்ல பேரன் கார்த்திக் என்பவர் தற்போது சென்னையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். தந்தையை இழந்த கார்த்திக்கை சிறுவயதிலிருந்தே பாட்டி சிவனம்மாள் தன் பேரனை உயிருக்கு உயிராக மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார்.

தன்னை பாசமாகவும், மிகுந்த செல்லமாகவும் வளர்த்த பாட்டியின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் கவலையில் தவித்தார் கார்த்திக். மகன்கள் இல்லாத பாட்டிக்கு கார்த்திக் தான் அவரது தந்தை ஸ்தானத்தில் இருந்து மூத்த பேரன் செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய வேண்டியது முறை. ஆனால் சென்னையில் மாட்டிக்கொண்ட கார்த்திக் இங்கிருந்து வீடியோ கால் மூலம் தன்னுடைய பாட்டிக்கு இறுதிச் சடங்கு செய்தார்.

இந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மதுரை வழக்கு படி 90 வயதை கடக்கும் போது உயிரிழந்தால் கல்யாண சாவு என்று மிகுந்த ஆடம்பரமாக இறுதிச்சடங்குகளை நடத்துவார்கள். ஆனால் தற்போது ஊரடங்கு சட்டத்தால் ஒரு சிலரே பாட்டியின் இறுதி சடங்கில் பங்குபெற்றதாக கூறப்படுகிறது. மேலும்  பாட்டியின் உடல் 3 மணி நேரத்தில் எரியூட்டி அவரது இறுதி பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.

GRANDMOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்